குடும்பத் தகராறில் ஒன்றரை மாத குழந்தை அடித்துக்கொலை.. தூத்துக்குடி அருகே பயங்கரம்!
தூத்துக்குடி அருகே குடும்பத் தகராறில் ஒன்றரை மாத குழந்தை அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி: வல்லாநாடு அருகே குடும்பத் தகராறில் ஒன்றரை மாத குழந்தை அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டை அடுத்த பாறைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவருக்கு ஒன்றரை மாதத்தில் நந்தினி என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது.

ராஜேஸ்வரியின் குடும்பத்துக்கும் அவரது உறவினரான வண்டிமலையான் என்பவருக்கும் தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ராஜேஸ்வரியின் வீட்டுக்கு வந்த வண்டிமலையான் வீட்டில் இருந்த ஒன்றரை மாத பெண் குழந்தையான நந்தியை தூக்கி வீசியுள்ளார்.
இதில் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதனை தடுக்கச்சென்ற தாய் ராஜேஸ்வரியையும் வண்டிமலையான் கத்தியால் குத்தியுள்ளார்.
படுகாயம் அடைந்த ராஜேஸ்வரி உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக உள்ள வண்டிமலையானை தேடி வருகின்றனர்.
குடும்பத்தகராறில் ஒன்றரை மாத குழந்தை தூக்கி வீசப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications