அத்துமீறும் காதல் ஜோடிகள்... அடையாள அட்டையயை கட்டாயமாக்கிய பூங்கா!

கோவையில் உள்ள பூங்கா ஒன்றில் காதல் ஜோடிகள் அத்துமீறுவதை தடுக்கும் வகையில் பூங்கா நிர்வாகம் அடையாள அட்டையை கட்டாயமாக்கியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

கோவை: பி.என். புதூர் பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் காதல் ஜோடிகள் அத்துமீறுவதை தடுக்கும் வகையில் பூங்கா நிர்வாகம் அடையாள அட்டையை கட்டாயமாக்கியுள்ளது.

வயதானவர்கள் இளைப்பாறும் இடம் மட்டுமின்றி குழந்தைகள் விளையாடும் இடமாகவும் பூங்காக்கள் உள்ளன.

காதல் ஜோடிகளின் மீட்டிங் ஸ்பாட்டாகவும் பூங்காக்கள் உள்ளன. பல பூங்காக்களில் அக்கம் பக்கத்தில் ஆட்கள் இருக்கிறார்கள், பொது இடம் என்றெல்லாம் கூட பார்க்காமல் காதல் ஜோடிகள் என்ற போர்வையில் சில சமயங்களில் அத்துமீறி வருகின்றனர்.

அட்டையாள அட்டை கட்டாயம்

அட்டையாள அட்டை கட்டாயம்

இது பூங்காவுக்கு வரும் பொது ஜனங்களை முகம் சுளிக்க வைக்கிறது. இந்நிலையில் கோவையில் காதல் ஜோடிகளின் அத்துமீறலை தடுக்க பூங்கா ஒன்று அடையாள அட்டையை கட்டாயமாக்கியுள்ளது.

45 ஏக்கர் பரப்பளவில் பூங்கா

45 ஏக்கர் பரப்பளவில் பூங்கா

கோவை பி.என். புதூர் பகுதியில் உள்ள பூங்காவில் 800 வகையான மரம், செடி, கொடிகள் உள்ளன. சுமார் 45 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த பூங்காவுக்கு ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

பூங்காவுக்குள் செல்ல அனுமதி

பூங்காவுக்குள் செல்ல அனுமதி

இந்த நிலையில் அடையாள அட்டை இருந்தால் மட்டுமே பூங்காவுக்குள் செல்ல அங்கு உள்ளவர்கள் அளிக்கின்றனர். திருமணமானவர்களிடம் கூட அடையாள அட்டையை கேட்பதோடு கழுத்தில் தாலி மற்றும் மெட்டி உள்ளதா என்று சோதித்த பிறகே பூங்காவிற்குள் செல்ல அனுமதிக்கின்றனர்.

பொதுமக்கள் எதிர்ப்பு

பொதுமக்கள் எதிர்ப்பு

மேலும் பள்ளி கல்லூரி மாணவிகள் வந்தால் பெற்றோருடன் வருமாறு திருப்பி அனுப்பிவிடுகின்றனர். பூங்கா நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை பொதுமக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

அத்துமீறும் காதலர்கள்

அத்துமீறும் காதலர்கள்

இந்நிலையில் காதல் ஜோடி என்ற பேரில் பூங்காவிற்கு வரும் சிலர் அத்துமீறலில் ஈடுபடுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. பூங்கா நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும் சிலர் வரவேற்பும் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+