அமைச்சர் செல்லூர் ராஜூ அலுவலகம் மற்றும் கட்சி அலுவலகம் மீது அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுகள் வீச்சு!
மதுரை: தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூவின் மதுரை அலுவலகம் மற்றும் அதிமுகவின் கட்சி அலுவலகம் மீது அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுகள் வீசிய சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையின் முக்கிய சந்திப்புகளில் ஒன்றான காளவாசலை அடுத்த சம்மட்டிபுரத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவின் எம்எல்ஏ அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் வீசிய பெட்ரோல் குண்டுகளில் ஒன்று வெடித்தது. இதில் அலுவலகத்தின் கதவு சேதமடைந்தது.

இதனைத் தொடர்ந்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை அருகே உள்ள அதிமுக கட்சி அலுவலம் மீதும் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே மர்மநபர்கள் பெட்ரோல் குண்டுகள் வீசியதில் கோயில் அருகே உள்ள சுவர் சேதமடைந்தது. இந்நிலையில் அமைச்சர் அலுவலகத்தின் மீதும் அதிமுக அலுவலகம் மீதும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெங்களூர் எம்எல்ஏ மாயம்.. தமிழ்நாட்டில் பதுங்கல்? -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications