திட்டமிட்டு டிராமா போடுகிறார்கள்.. அதிமுக இணைப்பு குறித்து பொன். ராதா பரபர பேச்சு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: தமிழகத்தில் திட்டமிட்ட நாடகம் அரங்கேற்றப்படுவதாக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தால் உண்மைகள் மூடி மறைக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறினார்.

மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பிரிந்து கிடக்கும் ஓபிஎஸ் மற்றும் சசிகலா அணி இணைவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

A planned drama implemented in Tamil Nadu politics: Minister Pon.Radhakrishnan

அதற்கு பதிலளித்த பொன்.ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் திட்டமிடப்பட்ட நாடகம் அரங்கேற்றப்படுவதாக குற்றம் சாட்டினார். ஜெயலலிதா மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும் பிரிந்து கிடக்கும் இரு அணிகளும் ஒன்றாக சேர்ந்தால் பல உண்மைகள் மூடி மறைக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறினார். ஓபிஎஸ் மீண்டும் சசிகலா அணியுடன் சேர்வதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது நினைவுக்கூறத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A planned drama implemented in Tamilnadu politics says Minister Pon.Radhakirushnan. He said that if the two teams joines together trues will be covered.
Please Wait while comments are loading...