எடப்பாடி பழனிச்சாமி பற்றி பேஸ்புக்கில் அவதூறு.. 6 பேர் மீது போலீசில் புகார்
தமிழக முதல்வர் குறித்து அவதூறு பரப்பியதாக 6 பேர் மீது சாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர்: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சாத்தூர் அதிமுக எம்.எல்.ஏ. எதிர்கோட்டை சுப்பிரமணியன் குறித்து பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவதூறாக கருத்துக்கள் பரப்பப்பட்டு வருவதாக கூறி சாத்தூர் காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டுள்ளது
தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பு நிலவி வந்த நிலையில் சசிகலா தரப்பைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு வாக்களித்த எம்எல்ஏக்களை கழுவி கழுவி மக்கள் ஊத்திக் கொண்டிருக்கிறார்கள்.

டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதேபோல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்தும் பல மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் உலாவுகிறது.
இந்த நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சாத்தூர் அதிமுக எம்.எல்.ஏ. எதிர்கோட்டை சுப்பிரமணியன் குறித்து அவதூறான கருத்துக்களைப் சமூக வலைதளங்களிவ் பதிவு செய்துள்ளதாக கூறி சாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சாத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி அளித்துள்ள புகாரில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர், நல்லமநாயக்கன்பட்டி மற்றும் விருதுநகரைச் சேர்ந்த வினோசுரா, மணிகண்டன், சதீஷ்குமார், கண்ணன், சந்தனகுரு, வைரமுத்து ஆகிய 6 பேரும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், எம்.எல்.ஏ., சுப்பிரமணியனுக்கும், அரசாங்கத்துக்கும் அவப்பெயர் ஏற்படுத்தி விட்டதாக புகாரில் குறிப்பிட்டிருக்கிறார் சண்முகக்கனி. மேலும் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications