கணக்குப் பிள்ளைக்கு திடீர் செக் வைத்த டெல்லி... குஷியில் சட்டாம் பிள்ளை
பஞ்சாயத்து செய்து வந்த கணக்குப் பிள்ளையின் கணக்குகளை முடித்துவிட்டதாம் டெல்லி. இதனால் சட்டாம்பிள்ளையார் செம குஷியாக இருக்கிறாராம்
சென்னை: தமிழகமே தம் கையில்தான் என்பதை பகிரங்கப்படுத்த விரும்பியதால் கணக்குப் பிள்ளை வசம் ஒப்படைத்த கணக்கு வழக்குகளை வாபஸ் பெற்றுவிட்டதாம் டெல்லி. இதனால் சட்டாம்பிள்ளை தரப்பு படுகுஷியில் இருக்கிறதாம்.
கணக்குப் பிள்ளைக்கு மூத்தவர் இருந்தவரை அரசல் புரசலாக மத்தியஸ்த வேலைகளை செய்து வந்தார். அவர் மறைந்ததுதான் தாமதம்.

கட்ட பஞ்சாயத்து
அவரை விஞ்சிய திறமை தம்மிடம் உண்டு என கதகளி ஆடினார். நீண்டகால கணக்குப் பிள்ளை என்பதால் டெல்லியும் பவ்யம் காட்டியது. பங்காளிகளுக்கு திரைமறைவாக கட்ட பஞ்சாயத்தை நடத்தியும் வந்தார் கணக்குப் பிள்ளை.

ஊடகங்களில் பிரேக்கிங் நியூஸ்
இந்த பஞ்சாயத்து பேசிக் கொண்டே தமக்கான பல விஷயங்களையும் சைக்கிள் கேப்பில் சாதித்தும் கொண்டாராம் கணக்கார். பங்காளிகள் பிரச்சனை இழுபறியான நிலையில் வெளிப்படையாகவே பஞ்சாயத்தை நடத்த ஊடகங்களிலும் அது பிரேக்கிங் நியூஸானது.

கணக்கு பிள்ளை கணக்கு முடிப்பு
இதனால் டெல்லிக்கு ஏகப்பட்ட நெருக்கடியாகிவிட்டது. இவரை நம்பி ஒப்படைச்சா நம்மையே நாசமாக்கிட்டாரே என நாசூக்காக நாங்க சொல்லுகிற வரை உங்க சைடு தகவல் எங்களுக்கு வேண்டாம் என சொல்லிவிட்டதாம். கணக்குப் பிள்ளையின் கணக்கு முடிக்கப்பட்டு இருப்பதால் உள்ளூர்வாசிகளுக்கு உள்ளூர மகிழ்ச்சி.

ஜாலி சட்டாம் பிள்ளை
இவர்களை விட கணக்குப்பிள்ளையோடு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிற சட்டாம்பிள்ளைக்குத்தான் செம குஷியாம். அப்படியே உள்ளூர் நாட்டாமை பஞ்சாயத்தை நமக்கு தந்தா நல்லா இருக்குமே என துண்டு போடவும் தொடங்கியிருக்கிறாராம் சட்டாம் பிள்ளை.
-
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம்












Click it and Unblock the Notifications