வெளிவருகிறது திமுக- காங். கூட்டணிக்கு வேட்டு வைக்கும் ஆ. ராஜாவின் 'அணுகுண்டு' புத்தகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான உண்மைகளை வெளிப்படுத்தும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆர். ராஜாவின் "IN MY DEFENCE" புத்தகம் இந்த ஆண்டின் இறுதியில் வெளியிடப்பட உள்ளது. திமுக தலைமையின் எதிர்ப்பை மீறி இந்த புத்தகத்தை வெளியிட ஆ. ராஜா முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் செய்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராஜா கைது செய்யப்பட்டு 15 மாதம் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது ஜாமீனில் வெளிவந்திருக்கும் ராஜா, ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்தது என்ன என்பது குறித்து விவரிக்கும் புத்தகத்தை வெளியிடப் போவதாக கூறியிருந்தார்.

ஆனால் சட்டசபை தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்ட நிலையில் அப்புத்தகம் வெளியாவதை திமுக தலைமை விரும்பவில்லை. இதனால் ஆ. ராஜாவும் புத்தகம் வெளியிடுவதை ஒத்தி வைத்திருந்தார்.

வெளியாகிறது புத்தகம்

வெளியாகிறது புத்தகம்

தற்போது இந்த வழக்கின் இறுதிகட்ட வாதங்கள் டெல்லி சிபிஐ தனிநீதிமன்றத்தில் அக்டோபர், நவம்பரில் நீதிபதி ஓபி ஷைனி முன்னிலையில் நடைபெற உள்ளது. அதே கால கட்டத்தில் தம்முடைய "IN MY DEFENCE" புத்தகத்தை வெளியிட ஆ. ராஜா முடிவு செய்திருக்கிறாராம்.

திமுக தலைமை அதிருப்தி

திமுக தலைமை அதிருப்தி

இது தொடர்பாக அண்மையில் திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டோரிடம் ராஜா விவாதித்திருக்கிறார். இருந்தபோதும் இப்புத்தக்கத்தால் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் பிளவு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் கருணாநிதி உள்ளிட்டோர் ராஜா புத்தகம் வெளியாவதை விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.

என்ன இருக்கிறது?

என்ன இருக்கிறது?

ஆ. ராஜாவின் இப்புத்தகத்தில், அவரது பதவிக்காலத்தில் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு எப்படி ஏகபோகமான ஒரு சில நிறுவனங்களிடம் இருந்தது; இதை தகர்க்க எடுத்த நடவடிக்கைகள்; உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோருக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் ஆ. ராஜாவின் புத்தகம் இருப்பதாக கூறப்படுகிறது.

உண்மைகள் வெளிவரும்...

உண்மைகள் வெளிவரும்...

தம்முடைய புத்தகம் குறித்து முன்னர் பேட்டியளித்திருந்த ஆ. ராஜா, 1992ல், பெரம்பலுாரில், என் அலுவலகத்தில் முதல் லேண்ட் - லைன் தொலைபேசி இணைப்பு பெற்றதில் இருந்து, இன்றைக்கு தொலைத் தொடர்புத் துறையில் ஆதிக்கம் செலுத்தும், தனியார் மொபைல் போன் நிறுவனங்களின் கூட்டணி வரைக்கும் இந்த நுால் அலசி ஆராயும். என் பதவிக் காலத்தில், இந்த ஆதிக்கத்தை கட்டுப்படுத்த, நான் எடுத்த கடும் நடவடிக்கைகளும், இதில் நிச்சயம் இடம் பிடிக்கும். நீதிமன்ற விசாரணையின் போது, வழக்கறிஞர்கள் கவனிக்கத் தவறிய விஷயங்கள், நீதிபதிகளின் பங்களிப்பின் முக்கியத்துவம் என இந்த வழக்கு தொடர்பாக சட்டரீதியான அனைத்து அம்சங்களும் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்பதற்காகவே புத்தகம் எழுதுகிறேன் எனக் கூறியிருந்தார்.

வினோத்ராய் புத்தகம்

வினோத்ராய் புத்தகம்

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக முன்னாள் மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராய், 'நான் ஒரு கணக்காளர் மட்டுமல்ல' என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதினார். அதில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும், ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம் தொடர்பான குற்றச்சாட்டுக்கு பொறுப்பாளி எனக் குறிப்பிட்டிருந்தார். தற்போது ஆ. ராஜாவின் புத்தகம் வெளியானால் அரசியல் அரங்கத்தில் பெரும் அணுகுண்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+