சென்னை, வானகரம் மீன் மார்க்கெட் அருகே கொள்ளையன் வெட்டிக் கொலை
சென்னை: மதுரவாயல் அருகே வானகரம் மீன் மார்க்கெட்டில் கொள்ளையன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
மதுரவாயல் அடுத்த வானகரம், மீன் மார்கெட் அருகே உள்ள காலி இடத்தில் இளைஞர் ஒருவர் உடலில் பலத்த வெட்டுக்காயங்களுடன் கொலை செய்யப்பட்டு இருப்பதாக வந்த தகவல் கிடைத்தது.

இதையடுத்து மதுரவாயல் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்டு கிடந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்தனர்.
இதில் கொலை செய்யப்பட்டவர் விருகம்பாக்கம், காந்தி நகரை சேர்ந்த
மணிகண்டன் (எ) புறாமணி(21), என்பதும் இவர் மீது விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் வழிப்பறி, செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது.
மேலும் நேற்று இரவு தனது நண்பரை பார்த்து விட்டு வருவதாக கூறி விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து சம்பவம் நடந்த இடத்தில் நண்பர்களுடன் உட்கார்ந்து மது அருந்தி உள்ளார். அப்போது ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக மணியை மர்மநபர்கள் ஓட, ஓட விரட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு எந்த திருட்டு வழக்கிலும் ஈடுபடமாட்டேன் என்று கூறி மணி விருகம்பாக்கம் போலீஸில் எழுதி கொடுத்து விட்டு வந்துள்ளார். அதன் பிறகு கோடம்பாக்கத்தில் நடந்த குற்ற சம்பவத்தில் கொள்ளையர்களை பிடிக்க மணி உதவியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கொலை நடந்ததா? அல்லது வேறு காரணங்கள் ஏதாவது உள்ளதா? என்ற கோணத்தில் மதுரவாயல் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications