ஓட ஓட வெட்டிய கும்பல்.. பெண்கள் பின்னால் ஒளிந்துகொண்ட ரவுடி.. சென்னையில் பரபர!
Recommended Video

சென்னை: சென்னையில் உயிர் தப்பிக்க குடியிருப்புக்குள் புகுந்து பெண்கள் பின்னால் ஒளிந்திருந்த ரவுடியை அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை எண்ணூரில் ரவுடிக்கு அரிவாள் வெட்டு எண்ணூர் டி கே பி நகரை சேர்ந்த பிரபல ரவுடி கிளி பிரபு. இவன் மீது புதுவண்ணாரப்பேட்டை தண்டையார்பேட்டை பகுதியில் கொலை கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் இன்று மாலை ஜே ஜே நகர் பகுதியில் நடந்து வந்துகொண்டிருந்த கிளி பிரபுவை இரு இளைஞர்கள் கத்தியுடன் துரத்தியுள்ளனர். உயிருக்கு பயந்து ஓடிய கிளி பிரபு குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து பெண்கள் பின்னால் ஒளிந்து கொண்டுள்ளான். அப்போது பெண்களை தள்ளிவிட்டு அவனை விடாமல் துரத்தி வந்து அரிவாளால் கைகளிலும் கழுத்திலும் வெட்டி இருக்கிறார்கள் மர்ம நபர்கள்.

அதே இடத்தில் உயிருக்கு போராடி அலறிய பிரபுவை பார்த்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த எண்ணூர் போலீசார் ரத்தவெள்ளத்தில் கிடந்த கிளி பிரபுவை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
[ இதுக்கு நக்கீரன் கோபாலை கைது செய்யாமலே இருந்திருக்கலாம்.. இப்போ நிலைமையை பாருங்க ]
உயிர் தப்பிக்க குடியிருப்புக்குள் புகுந்து பெண்கள் பின்னால் ஒளிந்திருந்த ரவுடியை அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications