செஞ்சி அரசு பள்ளியில் சோகம்.. தண்ணீர் தொட்டியில் விழுந்து மாணவன் பலி
செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தண்ணீர் தொட்டியில் விழுந்து மாணவன் சிவராமன் உயிரிழந்தார்.
செஞ்சி: செஞ்சியில் உள்ள ராஜா தேசிங்கு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் செஞ்சி வட்டம் மேல் அருங்கானத்தைச் சேர்ந்த சிவராமன் என்ற மாணவர் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
ராஜா தேசிங்கு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதிதாக கட்டடம் கட்டும் பணி நடைபெற்றுவருகிறது. கட்டிடப் பணிகளுக்காக தண்ணீர் தொட்டி கட்டப்பட்டு அவற்றில் தண்னீர் சேகரிக்கப்பட்டுள்ளது. அப்படி கட்டப்பட்ட 10 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டியில் ஆறரை அடி ஆழத்துக்கு தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது.

இன்று வழக்கம் போல, பள்ளிக்கு வந்த மாணவன் சிவராமன் அந்த பள்ளியில் கழிவறை வசதி இல்லாததால் மலம் கழித்துவிட்டு கால் கழுவுவதற்காக தண்ணீர் தொட்டி அருகே சென்றுள்ளார். அப்போது அவர் கால் இடறி தண்ணீர் தொட்டிக்குள் விழுந்துள்ளார். மாணவனுக்கு நீச்சல் தெரியாததால் நீரில் தத்தளித்துள்ளார். அருகில் யாரும் இல்லாததால் மாணவனைக் காப்பாற்ற முடியாததால் தண்ணீர் தொட்டியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தண்ணீர் தொட்டியில் விழுந்து மாணவர் உயிரிழந்தது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மாணவனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.
மாணவன் உயிரிழந்தது பற்றி கேள்விப்பட்ட பெற்றோர்கள் மாணவனின் உடலைக் கண்டு கதறி அழுதனர். பின்னர், மாணவனின் உயிரிழப்புக்கு பள்ளி நிர்வாகம் மற்றும் பள்ளிக் கட்டட கட்டுமான ஒப்பந்ததாரரின் அலட்சியமே காரணம் என்று குற்றம் சாட்டினர். மேலும், நீர் தேக்கிவைக்கப்பட்டிருந்த கழிவு நீர் தொட்டியை மூடி வைத்திருந்தால் சிறுவனின் உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது என்று அவர்கள் வேதனை தெரிவித்தனர்.
பள்ளியில் கழிவு நீர் தண்ணீர் தொட்டியில் மாணவன் சிவராமன் உயிரிழந்தது குறித்து அறிந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், மாணவனின் உயிரிழப்புக்கு நிவாரணமாக அவர்களுடைய பெற்றோருக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் அளிப்பதாக அறிவித்துள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications