மனைவியுடன் தகராறு செய்ததால் ஆத்திரம்: தாயை கொன்று புதைத்த மகன்.. 2 மாதங்களுக்கு பிறகு அம்பலமான உண்மை
மயிலாடுதுறை அருகே மனைவியுடன் தகராறு செய்த தாயை மகனே அடித்துக்கொன்று புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை: மனைவியுடன் தகராறு செய்த தாயை மகனே அடித்துக்கொன்று புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமணத்திற்கு பிறகு ஆண்பிள்ளைகள் மாறிவிடுவார்கள், மனைவியின் சொல்படிதான் நடப்பார்கள், பெற்றவர்களை மறந்துவிடுவார்கள் என்ற பேச்சு சமூகத்தில் பரவலாக உள்ளது.
அதற்கேற்றார் போல் பெற்றோர்கள் முதியோர் இல்லங்களில் ஆதரவற்று விடப்படுவதும், தெரியாத ஊரில் கொண்டு போய் விட்டு விட்டு பிள்ளைகள் சொல்லிக்காமல் வருவதும் அதிகரித்து வருவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகி வருகிறது.

நெஞ்சை உலுக்கும் சம்பவம்
சாலையோரங்களில் ஆதரவற்று சாப்பாட்டுக்கு கையேந்தும் முதியவர்களில் பலர் பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்களாகவே இருப்பார்கள். இந்நிலையில் மயிலாடுதுறை அருகே பெற்ற பிள்ளை செய்த ஒரு காரியம் நெஞ்சை உலுக்குவதாக உள்ளது.

தாய் உய்யம்மாள்
நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த வாளவராயன்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் உய்யம்மாள். இவரது மகன் கலியமூர்த்தி. இவருக்கு வயது 55.

திருமணத்திற்கு பின்
கலியமூர்த்திக்கு பூசம் என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். கலியமூர்த்தியின் திருமணத்திற்கு பிறகு வீட்டில் தொடர்ந்து பிரச்சனை வெடித்துள்ளது.

மாமியார் மருமகள் சண்டை
மாமியாருக்கும் மருமகளுக்கும் ஏகபொருத்தமாக இருந்துள்ளது. ஆகாத மருமகள் கைப்பட்டால் குத்தம் கால் பட்டால் குத்தம் என மாமியாரும், மாமியாரால் தனது நிம்மதி போயிவிட்டதாக மருமகளும் நாள்தோறும் முடியை பிடித்துக்கொள்ளாத குறையாக சண்டைபோட்டு வந்துள்ளனர்.

முற்றுப்புள்ளி வைக்க முடிவு
பல ஆண்டுகளாக தொடரும் அவர்களின் சண்டையால் தெருவே அல்லோகலப்பட்டுள்ளது. இதனால் நிம்மதியை இழந்த கலியமூர்த்தி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்தார்.

தாய் கொன்று புதைப்பு
ஒரு கட்டத்தில் மாமியார் மருமகள் சண்டை முற்றவே தாயை அடித்துள்ளார் கலியமூர்த்தி. இதில் கீழே விழுந்த உய்யம்மாள் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

ஆட்டுடன் சேர்த்து..
விஷயத்தை மறைக்க முடிவு செய்த கலியமூர்த்தி மனைவியுடன சேர்ந்து வீட்டு தோட்டத்திலேயே தாயை புதைத்துள்ளார். அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் வராமல் இருக்கு ஆடு ஒன்று இறந்து போயிவிட்டதாக கூறி ஆட்டுடன் சேர்த்து தாயை புதைத்துள்ளார்.

உண்மையை கக்கிய மகன்
இதைத்தொடர்ந்து தனது தாயை காணவில்லை என ஊர் மக்களிடம் கூறியுள்ளார். இதனை நம்பாத கிராம மக்கள் அவரை மிரட்டி விசாரித்ததில் உண்மையை கக்கியுள்ளார்.

கண்டுபிடித்த மக்கள்
இதையடுத்து மகன் கலியமூர்த்தியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தாயை கொன்று புதைத்துவிட்டு காணாமல் போனதாக மகனே நாடகமாடியது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸ் பாதுகாப்பு
இதையடுத்து மகன் கலியமூர்த்தியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். உய்யமாளின் உடல் புதைக்கப்பட்ட இடத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனை
வட்டாட்சியர், மருத்துவர்கள் முன்னிலையில் உய்யமாளின் உடல் தோண்டி எடுக்கப்படவுள்ளது. தாயை கொன்று புதைத்துவிட்டு காணாமல் போனதாக மகனே நாடகமாடியது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications