ப்ளூவேல் விளையாடி மண்டையை உடைத்துக் கொண்ட மாணவர்.. திருச்சி அருகே பரபரப்பு
திருச்சி துறையூரில் பாலிடெக்னிக் மாணவர் ஒருவர் ப்ளூவேல் விளையாட்டிலிருந்து மீட்கப்பட்டார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

ப்ளூவேல் விளையாடி மண்டையை உடைத்துக் கொண்ட மாணவர்-வீடியோ
திருச்சி: திருச்சி துறையூரில் பாலிடெக்னிக் மாணவர் ஒருவர் மொட்டை மாடியில் மண்டையை உடைத்துக் கொண்டபோது உயிருடன் மீட்கப்பட்டார்.
ப்ளூவேல் என்ற தற்கொலையை தூண்டும் விளையாட்டை யாரும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்று போலீஸார் அறிவுறுத்தி வருகின்றனர். மாணவர்களை அடிமையாக்கி தற்கொலை செய்யும் நிலைக்கு தூண்டப்படுகிறார்கள்.

திருச்சி மாவட்டம், துறையூர் நாகலாதபுரத்தைச் சேர்ந்த அபிஷேக் என்ற பாலிடெக்னிக் மாணவர் ப்ளூவேல் கேம் விளையாடியுள்ளார். மொட்டை மாடியில் மண்டையை உடைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
அவரை அவரது தந்தை தடுக்க முயன்ற போது தடுத்தால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதைத் தொடர்ந்து தகவலறிந்த போலீஸார் அந்த மாணவரை பத்திரமாக மீட்டனர்.












Click it and Unblock the Notifications