கள்ளக்குறிச்சி: தீ வைத்து எரிக்கப்பட்ட காவல்துறை வாகனங்கள்... தடயவியல் நிபுணர் குழு ஆய்வு!
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் மாணவியின் மரணத்திற்கு நீதிகேட்டு நடைபெற்ற போராட்டத்தின் ஏற்பட்ட வன்முறையில், போராட்டக்காரர்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட காவல்துறை வாகனங்களை, தடயவியல் நிபுணர் குழுவினர் இன்று ஆய்வு செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கணியமூர் பகுதியில் இயங்கி வந்த தனியார் பள்ளியில், பிளஸ்டூ மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்திற்கு நீதிகேட்டு நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. பள்ளி முழுவதும் சூறையாடப்பட்டு பள்ளியில் உள்ள பேருந்துகள் மற்றும் போலீஸ் வாகனங்கள் என அனைத்தும் ஆர்ப்பாட்டக்காரர்களால் தீ வைத்து கொளுத்தப்பட்டன.

இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தியது. தினமும் இது தொடர்பான செய்திகள் வந்து கொண்டே இருந்தாலும், தமிழக அரசு உறுதியாக நடவடிக்கை எடுப்போம் என்று, இந்த வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைத்தது. தற்போது சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Recommended Video
உயிரிழந்த மாணவிக்கு முழு உடல் கூறு ஆய்வு செய்யப்பட்ட நிலையில், நீதிமன்றத்தில் பெற்றோர்கள் நாளை காலை 11 மணிக்கு உடலைப்பற்றி செல்ல வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, மாணவியின் உடலை நாளை பெற்றுக்கொள்வதாக பெற்றோர் தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து கள்ளக்குறிச்சி மருத்துவமனை மற்றும் கனியாமூர் உள்ள பள்ளி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பள்ளியில் உள்ள பொருட்களை எடுத்துச் சென்றவர்கள் உடனடியாக திருப்பி ஒப்படைக்க வேண்டும் என, கிராமம் கிராமாக தண்டோரா போட்டு அறிவிக்கப்பட்டது. ஒப்படைக்காவிட்டால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து, பள்ளியில் கொள்ளைபோன பொருட்களை, இரவோடு இரவாக சாலையில் வைத்து செல்லும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. அதனைத் தொடர்ந்து பல்வேறு கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டு முக்கிய ஆவணமாக பள்ளியில் உள்ள ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில், பள்ளியில் எதிரே கலவரத்தின் பொழுது போலீசார் வாகனங்களை போராட்டக்காரர்கள் தீவைத்து எரித்தனர். இதனை இன்று தடயவியல் நிபுணர் சண்முகம் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து, அதில் உள்ள தடயங்களை சேகரித்தனர். முக்கிய தடயமாக, பீர் பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி வாகனங்களில் வீசியெறிந்து கொளுத்தியது தெரியவந்தது. பாட்டிலின் உடைந்த கண்ணாடி ஓடுகள் என பலவற்றையும் தடயவியல் நிபுணர்கள் சேகரித்து ஆய்வுக்கு எடுத்து சென்றனர்.












Click it and Unblock the Notifications