கணவன், மாமனார், மாமியார் செய்த கொடுமை.. வீடியோ வெளியிட்டு பெண் தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்!
ஆவடி அருகே கணவன் மற்றும் அவரது குடும்பத்தார் கொடுமை செய்வதாக 8 பக்க கடிதம் எழுதி வைத்து விட்டு பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

சென்னை: ஆவடி அருகே கணவன் மற்றும் அவரது குடும்பத்தார் கொடுமை செய்வதாக 8 பக்க கடிதம் எழுதி வைத்து விட்டு பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு முன்பு அவர் பெற்றோருக்கும் உருக்கமான வீடியோ எடுத்து வைத்துள்ள சம்பவம் கலங்க செய்துள்ளது.
சென்னை திருமுல்லைவாயில் செந்தில் நகரை சேர்ந்தவர் தேவநாத். இவருக்கும் அம்பத்தூரை சேர்ந்த ஆனந்தி என்ற 39 வயது பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணமாகியுள்ளது.
இருவரும் தேவநாத்தின் தந்தை சம்மந்தம், தாய் சிவகாமி ஆகியோருடன் செந்தில் நகர் வீட்டில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இதனிடையே கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி வாய் தகராறு வந்துள்ளது.

வெறுப்பாக நடந்த கணவன்
இதனால் தேவநாத் ஆனந்தியிடம் வெறுப்பாக நடந்து வந்துள்ளார். இந்த நிலையில் ஆனந்தி வீட்டின் படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

8 பக்க பரபரப்பு கடிதம்
தற்கொலை செய்து கொள்ளும் முன்பு 8 பக்க கடிதம் மற்றும் செல்போனில் வீடியோ எடுத்து வைத்துள்ளார் ஆனந்தி. சம்பவத்தின் போது வாட்ஸ்ஆப்பில் தன் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்த
சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருமுல்லைவாயில் காவல்துறையினர் கடிதம் மற்றும் விடியோவை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமண நாளில் கூட
இது குறித்து ஆனந்தியின் பெற்றோர் கூறுகையில்
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் 10 ஆம் தேதி இருவருக்கும் திருமண நாள் வந்துள்ளது. அதிலும் கணவர் ஆனந்தியிடம் அன்பாக நடந்து கொள்ளவில்லை என்று தெரிவித்தனர்.

என் முடிவுக்கு காரணம்..
இந்நிலையில் ஆனந்தி எழுதிய 8 பக்க கடிதத்தில் கூறியிருப்பதாவது, அக்கா மாமா நீங்க என் அம்மா அப்பாவுக்கு சமமானவர்கள். அக்கா மாமா நான் இந்த தற்கொலை முடிவு எடுக்க காரணமாக இருந்த என் மாமியார், மாமனார், என் புருஷன் இவங்க மூன்று பேரையும் சட்டத்துக்கு முன்னாடி நிறுத்தி தகுந்த தண்டனை வாங்கி தாங்க.

ரெண்டு வீடியோ இருக்கு
அப்ப தான் எந்த மருமகளுக்கும் இப்படி ஒரு சம்பவம் நடக்காது. அப்புறம் பீரோ லாக்கர்ல ஒரு லெட்டர் இருக்கு அதை சாட்சியா எடுத்துக்கங்க, ரெண்டு வீடியோவும் இருக்கு.

என் புருஷன் கோழை
என் மாமியார் கொடூர குணம் கொண்டவுங்க, என் மாமனார் பொண்டாட்டிக்கு பயப்படும் பயந்தாகோலி, என் புருஷன் அம்மா அப்பாவுக்கு பயந்த கோழை, ஏழைக்கு மனைவியா இருக்கலாம் ஆனா இந்த கோழைக்கு மனைவியா வாழ்ரத விட சாகரதே மேல்.. டாட்டா பாய் மை சுவிட் ஃபேமலி..
|
வீடியோவை பாருங்கள்
இவ்வாறு ஆனந்தி தனது தற்கொலை கடிதத்தில் எழுதியுள்ளார். அதேபோல் வீடியோவில் எனது கடைசி சிரிப்பை பார்த்து கொள்ளுங்கள். இந்த வீட்டில் எனக்கு சந்தோஷம் இல்லை. அதனால் இந்த முடிவை எடுத்துள்ளேன் என உருக்கமாக பேசியுள்ளார்.
[ஏழைக்கு மனைவியா இருக்கலாம் ஆனா கோழைக்கு.. அதிர வைக்கும் ஆவடி பெண்ணின் மரண வீடியோ!]
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications