ஏழைக்கு மனைவியா இருக்கலாம் ஆனா கோழைக்கு.. அதிர வைக்கும் ஆவடி பெண்ணின் மரண வீடியோ!
ஏழைக்கு மனைவியா இருக்கலாம் ஆனா கோழைக்கு மனைவியா இருக்க முடியாது என ஆவடியை சேர்ந்த ஆனந்தி தான் தற்கொலை செய்துகொள்ளும் முன்பு எழுதி வைத்துள்ள கடிதத்தில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: ஏழைக்கு மனைவியா இருக்கலாம் ஆனா கோழைக்கு மனைவியா இருக்க முடியாது என ஆவடியை சேர்ந்த ஆனந்தி தான் தற்கொலை செய்துகொள்ளும் முன்பு எழுதி வைத்துள்ள கடிதத்தில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
சென்னை திருமுல்லைவாயில் செந்தில் நகரை சேர்ந்தவர் தேவநாத். இவரது மனைவி ஆனந்தி. இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு தான் திருமணம் நடைபெற்றுள்ளது.
கணவன் மனைவி இருவரும் தேவநாத்தின் தந்தை சம்மந்தம், தாய் சிவகாமி ஆகியோருடன் செந்தில் நகர் வீட்டில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். திருமணம் ஆன நாள் முதலே கணவன் குடும்பத்தார் ஆனந்தியை டார்ச்சர் செய்து வந்துள்ளனர்.

துன்புறுத்திய கணவன்
ஆதரவாக இருக்க வேண்டிய கணவனும் அப்பா அம்மா பேச்சைக் கேட்டு மனைவியை துன்புறுத்தியுள்ளார். இதனால் திருமணம் ஆன நாள் முதல் கடுமையான மன உளைச்சல் மற்றும் விரக்தியில் இருந்து வந்துள்ளார் ஆனந்தி.

8 பக்க கடிதம்
ஒரு கட்டத்தில் கணவர் மற்றும் மாமியாரின் கொடுமை வரம்பை மீறவே ஆனந்தி தற்கொலை முடிவை கையில் எடுத்துள்ளார். தற்கொலை செய்துகொள்ளும் முன்பு 8 பக்க கடிதத்தை எழுதி வைத்துள்ள அவர் வீடியோக்களையும் எடுத்து வைத்துள்ளார்.

திடுக்கிடும் தகவல்
அவரது வீடியோவிலும் தற்கொலை கடிதத்திலும் பல திடுக்கிடும் தகவல் கூறப்பட்டுள்ளன. ஆனந்தி தனது கடிதத்தில் கூறியிருப்பதாவது, அக்கா மாமா நீங்க என் அம்மா அப்பாவுக்கு சமமானவர்கள். அக்கா மாமா நான் இந்த தற்கொலை முடிவு எடுக்க காரணமாக இருந்த என் மாமியார், மாமனார், என் புருஷன் இவங்க மூன்று பேரையும் சட்டத்துக்கு முன்னாடி நிறுத்தி தகுந்த தண்டனை வாங்கி கொடுங்க.

பீரோ லாக்கரில்
அப்ப தான் எந்த மருமகளுக்கும் இப்படி ஒரு சம்பவம் நடக்காது. அப்புறம் பீரோ லாக்கர்ல ஒரு லெட்டர் இருக்கு அதை சாட்சியா எடுத்துக்கங்க, இரண்டு வீடியோவும் இருக்கு.

கோழை புருஷன்
என் மாமியார் கொடூர குணம் கொண்டவர், என் மாமனார் பொண்டாட்டிக்கு பயப்படும் பயந்தாகோலி, என் புருஷன் அம்மா அப்பாவுக்கு பயந்த கோழை. ஏழைக்கு மனைவியா இருக்கலாம். ஆனா இந்த கோழைக்கு மனைவியா வாழ்வதை விட சாவதே மேல்.. டாட்டா பாய் மை சுவிட் ஃபேமலி.. இவ்வாறு ஆனந்தி தனது கடிதத்தில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
[கணவன், மாமனார், மாமியார் செய்த கொடுமை.. வீடியோ வெளியிட்டு பெண் தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்!]
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications