கூலி தொழிலாளி படுகொலை… போலீசார் உடையில் வந்த மர்மநபர்கள் வெறிச்செயலால் நெல்லையில் பதற்றம்
நெல்லை அருகே தொழிலாளி வெட்டி கொல்லப்பட்டதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை: நெல்லை அருகேகூலித்தொழிலாளியை போலீசார் உடையில் வந்து கொலைசெய்து விட்டு தப்பியோடிய மர்மகும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி போலீஸார் எல்லைக்குள் உள்ள மஞ்சன்குளத்தை சேர்ந்தவர் கேந்திரபால். இவர்இப்பகுதியில் தங்கிகூலி வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இவர் சம்பவம் நடைபெற்ற அன்று மாலை தனது வீட்டில் வேலைக்கு செல்லாமல் தூங்கி கொண்டிருந்தார்.

அப்போது போலீஸ் உடையில் வீட்டுக்குள் புகுந்த ஒருவர் அவரை தட்டி எழுப்பி, வீட்டு வாசலில் உயரதிகாரி நிற்பதாகவும் கேந்திரபாலை விசாரணைக்கு அழைப்பதாகவும் கூறியுள்ளார். இதைக்கேட்டு திடுக்கிட்ட கேந்திரபால், வெளியே வந்து பார்த்துள்ளார்.
அப்போது வீட்டின் வெளியே பயங்கர ஆயுதங்களுடன் மறைந்திருந்த கும்பல் அவரை சுற்றி வளைத்து சராமரியாக வெட்டியது. இதில் அவர் அந்த இடத்திலேயே பலியானார். பின்னர் அந்த கும்பல் அந்த இடத்திலிருந்து தப்பி ஓடியது. சத்தம் கேட்டு அங்கு வந்த மக்கள், இந்த கொலையை கண்டுசெய்வதறியாமல் திகைத்து நின்றனர்.
சம்பவம் குறித்து கேள்விபட்டதும் போலீஸ் உயரதிகாரிகள் தலைமையிலான குழுவினர் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த கொலை பழிக்கு பழியாக நடந்துள்ளதாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொலை சம்பவம் தொடர்பாக அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் கொலை சம்பவம் அதிகரித்து வருவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை அதிகரிக்க செய்துள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications