சென்னையில் சோகம்.. 5 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லையே.. ஏக்கத்தில் இளம் தம்பதி தூக்கிட்டு தற்கொலை
குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவன்-மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.
Recommended Video

சென்னை: குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவன்-மனைவி இருவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சென்னை மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மெரினா நேப்பியர் பாலம் அருகே உள்ள அன்னை சத்யாநகரை சேர்ந்த தம்பதி சந்திரன் 30, சுகன்யா 28. இவர்களுக்கு திருமணமாகி 5 வருடமாகியும் குழந்தை பிறக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் இருவருமே மனஅழுத்தம், சோகத்துடனே இருந்து வந்துள்ளனர். சுகன்யா மட்டும் தனது குறைகளையும் வேதனைகளையும் அக்கம்பக்கத்தாரிடம் அடிக்கடி சொல்லி அழுது வந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று சந்திரன் வீட்டில் இல்லாத சமயத்தில், குழந்தை இல்லாத ஏக்கத்தினால் விரக்தியின் உச்சத்துக்கே போய்விட்ட சுகன்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். பணிபுரிந்து வீடு திரும்பிய சந்திரன், சுகன்யா தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தது அலறி துடித்தார். அவரால் சுகன்யாவின் பிரிவை தாங்கி கொள்ளவே முடியவில்லை. இதனால் கணவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுபற்றிய விவரம் அறிந்த அக்கம்பக்கத்தினர் தலைமை செயலகம் போலீசாருக்கு தகவல் கொடுத்ததனர். விரைந்து வந்த போலீசார் தம்பதியின் உடல்களை மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இளம் தம்பதி இருவருமே இப்படி அடுத்தடுத்து தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இரு வீட்டு உறவினர்கள் மட்டுமல்லாது அப்பகுதி மக்களையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications