சென்னை தி. நகரில் இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து - பட்டப்பகலில் பயங்கரம்
சென்னை தி. நகரில் இளம்பெண்ணை கத்தியில் குத்திவிட்டு தப்பியோடிய வாலிபரை பொது மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
சென்னை: சென்னை தியாகராய நகரில் வனிதா என்ற இளம்பெண்ணை கத்தியில் குத்திவிட்டு தப்பியோடிய ரகுநாத் என்ற வாலிபரை பொது மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட பிரச்னைக்கு பழி தீர்க்கவே, வனிதாவை, ரகுநாத் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.
சென்னையைச் சேர்ந்த இளம்பெண் வனிதா, தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவருகிறார். இன்று காலையில் அலுவலவகம் செய்வதற்காக தியாகராய நகரில் உள்ள வெங்கட்நாராயணா சாலையில் வனிதா நடந்து சென்றுகொண்டிருந்தார்.

அப்போது அந்தப்பக்கமாக வந்த வாலிபர், வனிதாவை கத்தியால் குத்திவிட்டு தப்பியோட முயன்றார். அவரை அந்த வழியாக வந்த பொதுமக்கள் மடக்கிப்பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். படுகாயம் அடைந்த வனிதா, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கத்தியால் குத்திய நபரின் பெயர் ரகுநாத் என்பது தெரிய வந்தது. தனியார் நிறுவனத்தில் இரண்டுபேரும் வேலை செய்தபோது பிரச்னை ஏற்பட்டுள்ளது. முன்விரோதம் காரணமாகவே, வனிதாவை, ரகுநாத் கத்தியால் குத்தியது தெரியவந்துள்ளது. ரகுநாத்தை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
சமீபகாலமாக சென்னையில் இளம் பெண்கள் ஒருதலைக்காதலால் அதிக அளவில் பாதிப்பிற்கு ஆளான நிலையில் தற்போது முன்விரோதம் பழிக்குப் பழியாக இளம்பெண்களை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications