Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வீட்டில் தனியாக இருக்கிறேன் வாருங்கள்.. பேஸ்புக்கில் பழகிய பெண்ணை நம்பிபோன இளைஞருக்கு நேர்ந்த கதி!

கன்னியாகுமரி அருகே வீட்டில் தனியாக இருக்கிறேன் வாருங்கள் என்று அழைத்து இளைஞரிடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை பிடுங்கிச்சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    பேஸ்புக்கில் பழகிய பெண்ணை நம்பிபோன இளைஞரிடம் பணம் பறிப்பு

    கன்னியாகுமரி: வீட்டில் தனியாக இருக்கிறேன் வாருங்கள் என்று அழைத்து இளைஞரிடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை பிடுங்கிச்சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

    முகநூல் மூலம் பழகும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் சிலர் தங்களை நம்பியவர்களை நம்பி ஏமாற்றுவது தொடர் கதையாகியுள்ளது.

    இந்நிலையில் ராமநாதபுரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் பேஸ்புக்கில் பழகிய பெண் தோழியை நம்பி சென்று பணம் மற்றும் செல்போனை பறிகொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பேஸ்புக்கில் அறிமுகம்

    பேஸ்புக்கில் அறிமுகம்

    இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை அடுத்த வசந்தபுரத்தை சேர்ந்தவர் தனசேகரன். ஜெராக்ஸ் கடை நடத்திவரும் இவருக்கு ஃபேஸ்புக்கில் பெண் ஒருவர் அறிமுகமானார்.

    குறுகிய காலத்தில்

    குறுகிய காலத்தில்

    குறுகிய காலத்தில் நன்றாக பழகிய இருவரும் தங்களுடைய தகவல்களை பரஸ்பரம் பரிமாறிக் கொண்டனர். அந்த பெண் தான் நாகர்கோவிலில் வசிப்பதாகவும் கணவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார் என்றும் கூறியுள்ளார்.

    ஆசைக்காட்டிய பெண்

    ஆசைக்காட்டிய பெண்

    கணவர் வீட்டில் இல்லாததால் தான் மட்டும் தனியாக வசித்து வருகிறேன் என்றும் கூறிய அவர் வீட்டிற்கு வந்தால் ஜாலியாக இருக்கலாம் என்று தனசேகரனுக்கு ஆசைக் காட்டியுள்ளார்.

    தம்பியை அனுப்புகிறேன்

    தம்பியை அனுப்புகிறேன்

    இதனை நம்பிய தனசேகரன் நாகர்கோயிலுக்குச் சென்றார். அப்போது தனசேகரனிடம், தன்னால் வர முடியவில்லை ஆகையால் தன்னுடைய தம்பியை அனுப்பி வைக்கிறேன். அவருடன் வீட்டுக்கு வந்துவிடுங்கள் என்று அந்தப்பெண் கூறியுள்ளார்.

     குஷியில் புறப்பட்ட தனசேகரன்

    குஷியில் புறப்பட்ட தனசேகரன்

    அந்த பெண் கூறியபடியே தனசேகரனை சந்தித்த இளைஞர் ஒருவர் அவரை தனது அக்கா அழைத்து வரசொன்னார் எனக்கூறி தனது பைக்கில் அழைத்து சென்றுள்ளார். இத்தனை நாட்களாக முகநூலில் பழகியவரின் முகத்தை காண செல்கிறோம் என்ற குஷியில் புறப்பட்டார் தனசேகரன்.

    மிரட்டி பறிப்பு

    மிரட்டி பறிப்பு

    ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு தனசேகரனை அழைத்துச் சென்ற அந்த இளைஞர் அவரை மிரட்டி ஏ.டி.எம். கார்டு, இரகசிய எண் மற்றும் செல்போனை பறித்துக் கொண்டார்.

    தப்பியோட்டம்

    தப்பியோட்டம்

    பின்னர் அவரது கணக்கில் இருந்து ரூ.83 ஆயிரத்து 500-ஐ எடுத்து கொண்டார். பின்னர், தனசேகரனை அங்கேயே விட்டுவிட்டு அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

    பெண் தானா?

    பெண் தானா?

    பின்னர், தான் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பதை உணர்ந்த தனசேகரன் வடச்சேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். தனசேகரனுடன் ஃபேஸ்புக்கில் பழகியவர் உண்மையிலேயே பெண் தானா? அல்லது பெண் போல் பேசி ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பலா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    பெரும் அதிர்ச்சி

    பெரும் அதிர்ச்சி

    பேஸ்புக்கில் பழகிய பெண்ணை நம்பி சென்ற இளைஞரை மிரட்டி பணம் மற்றும் செல்போன் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+