கால் முறிந்த காதலனுடன் காதலை முறித்த இளம்பெண்.. உயிருடன் எரித்து தானும் தீக்குளித்து இளைஞர் தற்கொலை!
சென்னை: அம்பத்தூரில் காதலை முறித்துக்கொண்ட இளம்பெண்ணை உயிருடன் தீ வைத்து எரித்த இளைஞர் தானும் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அம்பத்தூர் புதூர் பானு நகரை சேர்ந்தவர் பார்த்திபன் என்ற 21 வயது இளைஞர் அண்ணாநகரில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வந்தார். அதே துணிக்கடையில் அம்பத்தூர் லெனின் நகரை சேர்ந்த மைதிலி 20 வயது இளம்பெண்ணும் வேலை பார்த்தார்.

ஒரே கடையில் வேலை பார்த்த போது போது அவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. அவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்துள்ளனர்.
கால் முறிந்ததால் விரிசல்
இந்நிலையில் கடந்த 6 மாதத்துக்கு முன்பு பார்த்திபனுக்கு விபத்து ஏற்பட்டது. இதில் அவரது கால் முறிந்தது. இதனால் வீட்டில் பார்த்திபன் ஓய்வெடுத்தால் இருவருக்கும் இடையிலான சந்திப்பு தடைபட்டு காதலில் விரிசல் விழுந்துள்ளது.
காதலை தொடர மறுப்பு
இந்த நிலையில் கடந்த 1 வாரத்துக்கு முன்பு பார்த்திபன் மைதிலியை சந்தித்து பேசினார். அப்போது அவருடன் பேச மைதிலி மறுத்தார். அதன் பிறகு பார்த்திபன் தினமும் மைதிலியை சந்தித்து தனது காதலை ஏற்றுக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்தினார். ஆனால் மைதிலி மறுத்ததாக தெரிகிறது.
தீக்குளிப்பேன் என மிரட்டல்
இந்த நிலையில் நேற்று இரவு திருமுல்லைவாயல் பஸ் நிறுத்தத்தில் இறங்கிய அவர் அங்கிருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பார்த்திபன், மைதிலியை வழிமறித்தார். தனது காதலை ஏற்றுக்கொள்ளாவிட்டால் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வேன் என கூறியுள்ளார்.
உயிருடன் தீ வைப்பு
ஆனால் அதனை கண்டுகொள்ளாமல் மைதிலி சென்றதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த பார்த்திபன் மைதிலி மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி உயிருடன் அவரை எரித்தார். இதனால் அலறி துடித்தார் மைதிலி. இதையடுத்து தானும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார் பார்த்திபன்.
இருவரும் பலி
இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்ர்த்தனர். ஆனால் சிகிச்சைப் பலனின்றி இருவரும் இன்று காலை உயிரிழந்தனர். இந்த சம்பவம் இருவரது குடும்பத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications