ராமமோகன் ராவ் வீடு அருகே ஆம் ஆத்மி தொண்டர் மீது தாக்குதல்!
வருமான வரித்துறை சோதனை நடைபெற்றும் வரும் ராமமோகன் ராவ் வீடு அருகே ஆம் ஆத்மி தொண்டர் ஒருவர் தாக்கப்பட்டார்.
சென்னை: வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் தமிழக அரசின் தலைமைச் செயலர் ராமமோகன் ராவ் வீடு அருகே ஆம் ஆத்மி தொண்டர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழக அரசின் கான்டிராக்டர் சேகர் ரெட்டியிடம் வருமான வரித்துறை, அமலாக்கப் பிரிவு, சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்துள்ளனர். சேகர் ரெட்டியிடம் பெற்ற தகவலின் அடிப்படையில் தமிழக அரசின் தலைமை செயலர் ராமமோகன் ராவ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

ராமமோகன் ராவின் மகன் வீடு உட்பட 13 இடங்களில் இச்சோதனை நடைபெறுகிறது. ஆந்திரா, கர்நாடகாவிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை அண்ணாநகரில் ராமமோகன் ராவ் வீடு அருகே ஆம் ஆத்மி தொண்டர் ஒருவர் முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருந்தார். அவரை அங்கிருந்து அப்புறப்படுத்த குடியிருப்புவாசிகள் முயற்சித்தனர். ஆனால் ஆம் ஆத்மி தொண்டர் மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி குடியிருப்புவாசி ஒருவர் ஆம் ஆத்மி தொண்டரை பத்திரிகையாளர்கள் முன்னிலையிலேயே தாக்கினார்.
இதையடுத்து அந்த தொண்டர் அங்கிருந்து வெளியேறினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications