ஆவின் பால்.. இனி இந்த 2 மாற்றம் வரப்போகுது.. "நச்" அறிவிப்பை சொன்ன தமிழ்நாடு அரசு..காப்பீடு திட்டமா?
சென்னை: ஆவின் பாலில் விரைவில் மாற்றம் வரப்போகிறது என்று பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.. அத்துடன், முக்கிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
தமிழக அரசுக்கு சொந்தமான ஆவினில், சுமார் 30 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது... இதனால், ஆவின் நிறுவனம் மூலமாக நாளொன்றுக்கு சுமார் 4.30 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் சராசரியாக 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

இந்த நிறுவனம் மூலமாக பால் மட்டுமில்லாமல் தயிர், வெண்ணெய், நெய், பால் பவுடர், பால்கோவா, மைசூர்பாக், ஐஸ்கிரீம் போன்ற பால் சார்ந்த பொருள்களும் தயாரிக்கப்பட்டு வருகிறது.
அமைச்சர் அதிரடி: இந்நிலையில், தமிழக அரசின் பால் நிறுவனமான ஆவினில் இனி மாற்றத்தை பார்ப்பீர்கள் என அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.. ஆவின் நிறுவனம் சார்பில், தமிழகத்தில் உள்ள 27 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியங்களின் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை வகித்தார்.
முன்னதாக, செய்தியாளர்களிடம் அமைச்சர் மனோ தங்கராஜ் சொன்னதாவது: ஆவின் நிறுவனம் மேம்பாட்டுக்கு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம். தினசரி ஆவின் பால் கையாளும் திறன் 40 லட்சம் லிட்டர் ஆகும். இதை இந்த வருடத்துக்குள் 70 லட்சம் லிட்டராக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான கட்டமைப்பு வசதிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
விரைவில் மாற்றம்: பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு தொழில் செய்ய உகந்த சூழல் ஏற்படுத்தப்படும். தினசரி 70 லட்சம் லிட்டர் பால் கையாளும் திறனை மேற்கொள்ளும்போது, பால் உற்பத்தியை அதிகரிகரிக்க வேண்டும்.
இதற்காக, 2 லட்சம் கறவை மாடுகள் வழங்கப்படும். அனுமதியின்றி பால் உற்பத்தியாளர் சங்கம் நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இது மிகவும் ஆபத்தானது. இந்த பால் என்ன தரத்தில் கொடுக்கிறார்கள் என்பது நமக்கு தெரியாது. அதனால், அனுமதி இன்றி செயல்படுகிற அல்லது கலப்பட பொருள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ரயில்வே நிர்வாகம்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆவின் பாலகம் அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்தோம். ரயில்வே நிர்வாகம் ஒப்பந்த தொகை மிக அதிகமாக இருக்கிறது. அதனால், தமிழக அரசு தரப்பில் இருந்து ரயில்வே நிர்வாகத்திடம் பேசி, ரயில் நிலையங்களில் ஆவின் பாலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆவினில் இனி வரும் காலங்களில், உறுதியாக மாற்றத்தை பார்க்கலாம்.. ஆவின் தண்ணீர் பாட்டில் திட்டம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்" என்றார் அமைச்சர்.

அவரது இந்த 2 அறிவிப்புகள்தான் பொதுமக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.. அதுமட்டுமல்ல, சேலம் அருகே தலைவாய்ப்பட்டியில் உள்ள ஆவின் பால் பண்ணையில், அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு மேற்கொண்டார்.. அப்போது பால் பதப்படுத்தப்படும் பகுதி, பால் பாக்கெட்டுகள் தயாரிக்கும் இடம், உப பொருட்கள் தயாரிக்கும் பகுதி, ஐஸ்கிரீம் உற்பத்தி செய்யும் என அனைத்து இடங்களிலும் நேரில் ஆய்வு செய்தார்.
காப்பீடு திட்டம்: அப்போது ஆவின் நிர்வாக அதிகாரிகள், உணவு கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள், கால்நடை பராமரிப்பு துறை ஆகியோருடன் ஆய்வு கூட்டமும் நடத்தினார்.. அப்போது அமைச்சர் பேசும்போது, பால் உற்பத்தியை பெருக்கவும், ஆவின் நிர்வாகத்தை மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.. எனவே, பால் உற்பத்தியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு கறவை மாடுகளுக்கு காப்பீடு திட்டம் கொண்டு வர முடிவு செய்திருப்பதாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளது, மேலும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டுள்ளது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications