வெலவெலத்த வேலூர்.. "தர்மசங்கட" திமுக.. சத்துவாச்சாரியில் ஆவின் பால் திருட்டு.. அதெப்படி 2 பால் வண்டி?

Subscribe to Oneindia Tamil

வேலூர்: வேலூர் ஆவின் விவகாரம் விஸ்வரூபமெடுத்து வருகிறது.. உண்மையிலேயே என்ன நடந்தது சத்துவாச்சாரியில்?

அமுல் நிறுவனம் தமிழகத்துக்குள் நுழைய முயற்சித்து வருகிறது.. அமுல் என்பது, குஜராத் அரசின் பொதுத்துறை நிறுவனமாகும்..

அதாவது, பால் உற்பத்தி விவசாயிகளிடம் இருந்து அதிக விலைக்கு பால் கொள்முதல் செய்ய, அமுல் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.. அந்த வகையில், தர்மபுரி, வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் விளம்பர பணிகளையும் ஆரம்பித்துள்ளது.

aavin vellore aavin theft of thousands of liters of cows milk and what happened

தட்டுப்பாடு: தமிழகத்துக்குள் திடீரென, அமுல் வந்துவிட்டால், ஆவின் நிறுவனத்திற்கு பால் தட்டுப்பாடு ஏற்படும்... ஏற்கனவே ஆவின் பால் சரிவர கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக வரும்நிலையில், அமுலின் வருகையானது, கிலியை தந்து வருகிறது.. ஆனால், அமுல் வந்தாலும் ஆவினுக்கு எந்தபாதிப்பும் இல்லை என்று பால்வளத்துறை அமைச்சர் உறுதி தந்து வருகிறார்.

இதற்கு நடுவில் பல்வேறு மாவட்டங்களில் ஆவின் பால் தட்டுப்பாடு நிலவ ஆரம்பித்துள்ளது.. இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் தலையிட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கைகளை விடுக்க துவங்கி உள்ளன..

"பால் கொள்முதல் குறைந்திருப்பதும், ஆவின் பால் பதப்படுத்தும் நிலையங்களில் போதிய எண்ணிக்கையில் பணியாளர்கள் இல்லாததும் தான் ஆவின் பால் வழங்கல் பாதிப்புக்கு காரணம்.. ஆவின் பாலுக்கு இனி தட்டுப்பாடு ஏற்படாது.. அனைத்து மாவட்டங்களிலும் ஆவின் பால் சரியான நேரத்தில் வழங்கப்படும்" என்று மீண்டும் பால்வளத்துறை அமைச்சர் விளக்கம் தந்தாலும், பற்றாக்குறையும், தட்டுப்பாடும், தொடர்ந்து நீடித்தே வருகிறது.

சத்துவாச்சாரி: அந்தவகையில் வேலூர் மாவட்டமும் ஒன்றாகும்.. இங்கு சத்துவாச்சாரியில் ஆவின் பால் பண்ணை இயங்கி வருகிறது... இங்கிருந்து, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு தினசரி சுமார் 93 ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டுகள் 500-க்கும் மேற்பட்ட முகவர்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. சுமார் 8 ஆயிரம் லிட்டர் பால் அளவுக்கு தயிர், மோர் உள்ளிட்டவை தயாரிக்கப்படுகிறது.

கடந்த வாரம்கூட, வேலூர் ஆவின் பால் பண்ணையில் இருந்து, முகவர்களுக்கு செல்லும் பால் தாமதமாக செல்வதாகவும், தயிர், மோர் உள்ளிட்டவை குறித்த நேரத்துக்கு தயாரித்து வழங்க முடியவில்லை என்றும் புகார்கள் கிளம்பின.. இப்படிப்பட்ட சூழலில் இன்னொரு புகாரும் இதே வேலூர் ஆவினில் கிளம்பி உள்ளது. சத்துவாச்சாரி ஆவின் பால் பண்ணையில் இருந்து ஒரே பதிவெண் கொண்ட 2 வாகனங்கள் மூலம் தினமும் பல ஆயிரம் லிட்டர் பால் திருடப்படுவதாக பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆவில் பால்: சத்துவாச்சாரியில் செயல்படும் ஆவின் பால் பண்ணையில் இருந்து திமிரி வழித்தடத்தில் இயக்கப்படும் முகவர்களுக்கு பால் பாக்கெட்டுகளை கொண்டு செல்லும் வாகனத்தில், ஒரே பதிவில் கொண்ட 2 வாகனங்கள் இயக்கப்பட்டதாக சொல்கிறார்கள்.. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 2500 லிட்டர் என பல ஆயிரம் லிட்டர் பால் திருடப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த குற்றச்சாட்டு, வேலூர் மக்களை அதிர வைத்து வருகிறது.. இதுகுறித்து ஆவின் நிர்வாகத்தினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், ஒரே பதிவெண் கொண்ட 2 வாகனம் இயக்கப்பட்டது குறித்து வேலூர் வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது... இது குறித்து போக்குவரத்து அதிகாரிகளின் விசாரணையை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆவின் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

வேலூர் சத்துவாச்சாரி: வேலூர் சத்துவாச்சாரியில் இயங்கும் ஆவின் பால் பண்ணையில் நூதன முறையில் பால் திருட்டு நடைபெறுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஒரே பதிவெண் கொண்ட 2 வாகனங்கள் மூலம் தினமும் பல ஆயிரம் லிட்டர் பால் திருடப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த திருட்டு குறித்து ஆவின் நிர்வாகத்தினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் போக்குவரத்து அதிகாரிகளும் இன்று விசாரணை நடத்துகின்றனர். பால் திருட்டு கண்காணிப்பை அதிகாரிகள் தீவிரப்படுத்திய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரே பதிவெண்ணில் இயங்கிய 2 வேன்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் உரிய விசாரணைக்கு பின் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே, அம்பத்தூர் ஆவினில் சிறுவர்களை வேலைக்கு வைத்ததாக குற்றச்சாட்டுகள் கிளம்விப உள்ள நிலையில், வேலூர் விவகாரமும் விஸ்வரூபமெடுத்து வருகிறது.

நேற்றைய தினம், அதிகாரிகள் விரைந்து சென்று பார்த்திருக்கிறார்கள்.. அப்போது, டி.என்.23 ஏ.சி. 1352 என்ற ஒரே எண்ணில் 2 வேன்களில் பல ஆயிரம் மதிப்புள்ள பாக்கெட் பாலை ஏற்றி கொண்டு புறப்பட தயார் நிலையில் இருந்ததாம்.. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் 2 வேன் மற்றும் பால் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்திருக்கிறார்கள்.

நம்பிக்கை: இதுகுறித்து ஆவின் அதிகாரிகள் உடனடியாக வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆவின் அலுவலகத்தில் இருந்த 2 வேன்களுக்கும் சீல் வைத்தனர்.. தொடர்ந்து இன்றும், ஆவின் அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வேன்களை ஆய்வு செய்தனர். இதில் பொய்யான பதிவெண் கொண்ட வேன் எது என்பது கண்டுபிடிக்கப்படும். இதனை தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் சிக்குவார்கள் என்று உறுதியாக சொல்கிறார்கள்..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+