கனவு மட்டும் கூடாது.. கடின உழைப்பும் வேண்டும்.. இளைஞர்களுக்கு அப்துல் கலாம் அறிவுரை
திருச்சி : கனவு காண்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், கடின முயற்சியும் உழைப்பும் இருந்தால் வாழ்வில் வெற்றியடையலாம் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இளைஞர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இயற்கை வேளாண் கருத்தரங்கிலும், அதைத் தொடர்ந்து அரியலூரில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவிலும் பங்கேற்ற முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம், இரவு திருச்சி சுற்றுலா மாளிகையில் தங்கினார். நேற்று காலை அறையை விட்டு அப்துல்கலாம் வெளியே வந்தார். அப்போது அவருக்கு அங்கு நின்ற சிறுவர்கள், பொதுமக்கள் ரம்ஜான் வாழ்த்துக்களை கூறினர். அவர் பதிலுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

அவரோடு சிறுவர்களும், பொதுமக்களும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
அப்போது அப்துல் கலாம் செய்தியாளர்களிடம் கூறியதாவது..,
இளைஞர்கள் கனவு மட்டும் காண்பதோடு இல்லாமல் அறிவுத்திறனை வளர்த்து கொள்ள வேண்டும். கடின உழைப்பு இருக்க வேண்டும். பிரச்சினைகளை கண்டு அஞ்சக்கூடாது. இந்த மூன்றும் இருந்தால் இளைஞர்களுக்கு வாழ்வில் அனைத்தும் வெற்றி தான்'' என்றார்.
அதன்பின் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் நடந்த தனியார் பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக அப்துல்கலாம் காரில் புறப்பட்டு சென்றார்.
அதைத் தொடர்ந்து மதுரை நிகழ்ச்சியிலும் பங்கேற்ற அப்துல்கலாம் மீண்டும் திருச்சி வந்து, விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications