திமுக மாவட்டச் செயலாளர் பதவி பறிப்பு! அப்துல் வஹாபுக்கு அதிர்ச்சி கொடுத்த திமுக தலைமை!
நெல்லை: நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளர் பதவியிலிருந்து அப்துல் வஹாப் எம்.எல்.ஏ. விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக அதே சிறுபான்மையினர் சமூகத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மைதீன் கான் நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் ஏற்கனவே இந்தப் பதவியில் இருந்தவர் என்பதும் உடல்நலமின்மையால் அதிலிருந்து ஒதுங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமைச்சரவை மாற்றத்தை தொடர்ந்து மாவட்டச் செயலாளர்கள் மாற்றத்தையும் கையில் எடுத்திருக்கிறார் முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின்.
முதல் விக்கெட்டாக அப்துல் வகாப் வீழ்த்தப்பட்டுள்ள நிலையில் இனி அடுத்தடுத்து சில அதிரடிகள் தொடரலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அப்துல் வகாப் மீதான திமுக தலைமையின் கோபத்திற்கு என்ன காரணம் என்பது பற்றியெல்லாம் தனிச்செய்தியாக பார்க்கலாம்.
இதனிடையே அப்துல் வகாப் விடுவிப்பு குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு;
''திருநெல்வேலி மத்திய மாவட்டக் கழகச் செயலாளராகப் பணியாற்றி வரும் அப்துல் வகாப் அவர்களை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக டி.பி.எம். மைதீன்கான், (எண்.110, சிக்கந்தர்புரம் தெரு, குற்றாலம் சாலை, திருநெல்வேலி டவுண், திருநெல்வேலி - 627 006) அவர்கள் திருநெல்வேலி மத்திய மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.
இவருடன் இணைந்து ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட, மாநகர நிர்வாகிகள் பணியாற்றிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.''
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி












Click it and Unblock the Notifications