சிறையில் மயங்கி விழுந்த அபிராமி.. 4 நாட்களாக சரியாக சாப்பிடவில்லையாம்!
Recommended Video

சென்னை: கடந்த 4 நாட்களாக ஏற்பட்ட மன அழுத்தம், உணவு உண்ணாமை காரணமாக அபிராமி நேற்று இரவு சிறையிலேயே மயங்கி விழுந்ததாக பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன.
குன்றத்தூர் மூன்றாம் கட்டளை பகுதியைச் சேர்ந்த விஜயின் மனைவி அபிராமி. இவர்களுக்கு இரு குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் அபிராமிக்கு அங்குள்ள பிரியாணி கடையில் பணிபுரியும் சுந்தரம் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.
இதனால் குழந்தைகள் இருவரையும் கடந்த 31-ஆம் தேதி அபிராமி கொன்றுவிட்டு திருவனந்தபுரத்துக்கு தப்பியோடினார். இதையடுத்து அபிராமியை நாகர்கோவிலுக்கு வரவழைத்த போலீஸார் கைது செய்தனர்.

கண்டனம்
இதையடுத்து அவர் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் தமிழகமே அதிர்ச்சியில் உறைந்தது. இந்நிலையில் இந்த சம்பவத்துக்கு பெரும்பாலானோர் கண்டனம் தெரிவித்தனர்.

அழுத அபிராமி
சிறையில் கடந்த 4 நாட்களாக யாருடனும் அபிராமி பேசுவதில்லை. யாராவது பேசினாலும் அவர்களிடம் முகம் கொடுத்து கூட அவர் பேசுவதில்லை. மேலும் சக கைதிகளும் அவரை சூழ்ந்து கொண்டு கதை கேட்கின்றனராம்.

தொல்லை தாங்க முடியல்
தொடர்ந்து இவர்கள் கதை கேட்டு நச்சரித்து கொண்டே இருப்பதால் தன்னால் சக கைதிகளின் தொல்லை தாங்க முடியவில்லை என்பதால் தன்னை தனிச்சிறையில் அடைக்குமாறு அபிராமி ஜெயிலரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

4 நாட்களாக அழுத்தம்
இந்நிலையில் நேற்று இரவு அபிராமி சிறையில் மயங்கி விட்டார். இதையடுத்து அங்குள்ள மருத்துவமனையில் அவரை காண்பித்த போது அவர் கடந்த 4 நாட்களாக உண்ணாமல், தூங்காமல் தொடர்ந்து அழுது கொண்டே இருப்பதால் இந்த மயக்கம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். "குழந்தைகளை கொன்றுவிட்டேனே காமம் என் கண்ணை மறைத்து விட்டதே" என கைது செய்யப்பட்ட போது போலீஸிடம் அபிராமி அழுதது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications