அடிச்சதேயில்லையாம்.. இரு பிள்ளைகளையும் பூ போல பார்த்துக் கொண்ட அபிராமிக்கு கொலை வெறி வந்தது எப்படி?
Recommended Video

சென்னை: இதுவரை ஒரு முறை கூட குழந்தைகளை அடிக்காத அபிராமிக்கு அவர்களை கொல்ல எப்படிதான் மனம் வந்ததோ தெரியவில்லை.
குன்றத்தூரை அடுத்த மூன்றாம் கட்டளையில் வசிப்பவர் விஜய். இவரது சொந்த ஊர் கடலூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஆகும். அபிராமி சென்னை வடபழனியில் உள்ள பெரிய நட்சத்திர ஹோட்டலில் வரவேற்பாளராக பணியாற்றி வந்தார்.
அப்போது அங்கு பணி செய்ய வந்த விஜய்க்கும் அபிராமிக்கும் இடையே காதல் மலர்ந்து பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தாலும் திருமணம் செய்து கொண்டனர். இனிதாக இருந்த இவர்களது வாழ்வில் கள்ளக்காதல் என்ற சுனாமி வந்தது.

கைது
இதன் விளைவு இரு குழந்தைகளையும் வாரி எடுத்து சென்றது. ஆம் கள்ளக்காதலுக்காக இடைஞ்சலாக இருந்த இரு குழந்தைகளையும் கொன்று விட்டார் அபிராமி. இதையடுத்து திருவனந்தபுரத்துக்கு தப்பிய அவரை நாகர்கோவிலில் வைத்து போலீஸார் கைது செய்தனர்.

ஸ்கூட்டி பரிசு
இந்நிலையில் அபிராமி குறித்த சில தகவல்கள் கிடைத்துள்ளன. அபிராமி இதுவரை இரு குழந்தைகளையும் அடித்ததே இல்லையாம். எப்போதும் அன்பாக பார்த்துக் கொள்வாராம். தினமும் அஜய்யை பள்ளிக்கு கொண்டு செல்வாராம். இந்நிலையில் பிறந்தநாள் பரிசாக அவருக்கு ஸ்கூட்டியை விஜய் வாங்கிக் கொடுத்துள்ளார்.

ஸ்கூட்டியில் உலா
இதிலிருந்துதான் அவரது குடும்பத்துக்கு பெரும் பிரச்சினை ஏற்பட்டது. எப்போது பார்த்தாலும் ஸ்கூட்டியை எடுத்து கொண்டு பியூட்டி பார்லர் செல்வதும் அனைவரிடமும் பேசி ஊர் சுற்றுவதையுமே வேலையாக கொண்டிருந்தார். அந்த பகுதியில் விஜய்யை காட்டிலும் அபிராமியைதான் எல்லாருக்கும் தெரியுமாம்.

பூப்போல் பார்த்து கொண்டார்
அஜய், கார்னிகா ஆகியோரை அபிராமி பூப்போல் பார்த்து கொண்டார். இதுவரை அவர்களை அடித்ததே இல்லையாம். அப்படி அபிராமிக்கு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்தும் கழுத்தை நெரித்தும் கொலை செய்ய எப்படி மனம் வந்தது என்பது புரியாத புதிராக உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications