பண்ருட்டி அருகே ஓடும் பேருந்தில் விபத்து: வெயிலுக்கு ஸ்டெப்னி வெடித்து 20 பேர் படுகாயம்
பேருந்தின் ஸ்டெப்னி டயர் வெடித்து 20-பேர் படுகாயமடைந்துள்ளனர்.
Recommended Video

பண்ருட்டி: வெயில் காரணமாக தனியார் பேருந்து மீதிருந்த ஸ்டெப்னி டயர் வெடித்ததால் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததுடன், ஒருவரது கை துண்டிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சேந்தநாடு என்ற ஊரிலிருந்து பண்ருட்டி நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

சின்னசேமகோட்டை என்ற இடத்தில் பேருந்து சென்றபோது, பேருந்தின் மேல்புறம் இருந்த ஸ்டெப்னி டயர் அதிகமான வெயில் காரணமாக திடீரென வெடித்து விபத்து ஏற்பட்டது.
இதில் பேருந்தின் மேல் பகுதி வெடிகுண்டு வெடித்தது போல் ஓட்டை ஏற்பட்டுள்ளது. டயர் வெடித்து பேருந்துக்குள் விழுந்ததில் பயணி ஒருவருக்கு கை துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் பேருந்திலிருந்த 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் அனைவரும் உடனடியாக பண்ருட்டி மற்றும் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர், இந்த சம்பவம் குறித்து புதுப்பேட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications