மீனம்பாக்கத்தில் பெரும் டிராபிக் ஜாம்.. அடுத்தடுத்து 5 கார்கள் மோதிக் கொண்டதால் பரபரப்பு
சென்னை மீனம்பாக்கத்தில் அடுத்தடுத்து நடந்த விபத்துகளால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை மீனம்பாக்கத்தில் அடுத்தடுத்து நடந்த விபத்துகளால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
சென்னை மீனம்பாக்கத்தில் இன்று அடுத்தடுத்து 5 கார்கள், இருசக்கர வாகனம் மோதிக் கொண்டன. இந்த திடீர் விபத்தில் சிக்கி 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பழவந்தாங்கல் சிக்னலில் நடந்த இந்த விபத்தால் மீனம்பாக்கத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

விமான நிலையம் இப்பகுதியில் உள்ளது. மேலும் இது தென் மாவட்டங்களுக்குச் செல்லும் முக்கியச் சாலை என்பதால் மிக முக்கியமான சாலையாகும். போக்குவரத்து நெரிசல் காரணமாக மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications