நெல்லை அருகே வேனும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து: 6 பேர் உயிரிழப்பு
நெல்லை: நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே ஆம்னி வேனும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்தவர்கள், ஆம்னி வேனில் குற்றாலத்திற்கு சுற்றுலா சென்றிருந்தனர். சுற்றுலாவை முடித்து நள்ளிரவு சொந்த ஊர் திரும்பி கொண்டிருந்தனர்.

இந்நிலையில், நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்த வெள்ளாளன்குளம் என்ற வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரி, ஆம்னி வேன் மீது பயங்கரமாக மோதியது. இதில் வேனில் பயணம் செய்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இவர்கள் அனைவரும் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றனர். மேலும் சிலர் கவலைக்கிடமாக இருக்கின்றனர்.
இது குறித்து தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பலியானவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்களையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications