லாரி மீது கார் மோதல்: 3 பேர் பலி... திண்டிவனம் அருகே பரிதாபம்
திண்டிவனம் அருகே லாரி மீது கார் மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர்.
திண்டிவனம்: திண்டிவனம் அருகே லாரி மீது கார் மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா சேந்தமங்கலத்தைச் சேர்ந்தவர் மனோகரன் (52). இவரது மகன் அரவிந்தன் (23), இவர்களது உறவினர் ராஜமாணிக்கம் (60). இவர்கள் 3 பேரும் ஒரு காரில் திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்றனர். காரை ராஜமாணிக்கம் ஓட்டி சென்றார்.

இந்த கார் திண்டிவனம் ஒலக்கூர் கூட்டு ரோடு அருகே சென்றபோது திடீரென காரின் டயர் வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தறிகெட்டு ஓடியது.
பின்னர் அந்த கார் தடுப்புச் சுவர் மீது ஏறி மறுபக்கமாக சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்து கொண்டிருந்த லாரி மீது மோதியது. இதில் கார் அப்பளமாக நொறுங்கியது. இதையடுத்து காரில் இருந்த மனோகரன், அரவிந்தன், ராஜமாணிக்கம் ஆகியோர் உடல் நசுங்கி உயிரிழந்துவிட்டனர்.
தகவல் அறிந்ததும் திண்டிவனம் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், ஒலக்கூர் சப்-இன்ஸ் பெக்டர் பாபு மற்றும் போலீஸார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications