மனோஜ் சாமியாரும் ஒரு ஹவாலா புரோக்கர்தானாம்... பரபர தகவல்!
கோடநாடு கொலையில் கைது செய்யப்பட்டுள்ள மனோஜும் ஹவாலா ஏஜென்ட் என்று போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கோத்தகிரி : கோடநாடு காவலாளி கொலை மற்றும் கொள்ளையில் நேற்று கைது செய்யப்பட்ட சாமியார் மனோஜும் ஒரு ஹவாலா புரோக்கர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு பங்களாவில் ஏப்ரல் 24ம் தேதி நள்ளிரவு காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 11 பேர் கொண்ட மர்ம கும்பல் காரில் வந்து கொள்ளையடித்துச் செல்லும் போது அதனை வழிமறித்த காவலாளி கொலை செய்யப்பட்டதாக முதலில் தகவல்கள் வெளியாகின.
கொலை மற்றும் கொள்ளைக்கான எந்த துப்பும் கிடைக்காத நிலையில் கோடநாடு பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தில் சந்தோஷ்சாமி, திபு, சதீசன், உதயகுமார் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளி என்று சொல்லப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் சேலம் அருகே சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
மற்றொரு குற்றவாளி சயன் கேரளாவிற்கு குடும்பத்துடன் தப்பிக்க முயன்ற போது விபத்தில் சிக்கியதில் சயனின் மனைவி வினுப்ரியா மற்றும் மகள் நீது உயிரிழந்தனர். சுயநினைவு திரும்பாத நிலையில் தொடர்ந்து சயன் கோவை அரசு மரத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

கூலிப்படையுடன் தொடர்பு
கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகளோடு தொடர்புடைய சாமியார் மனோஜ் நேற்று கைது செய்யப்பட்டார். கோவை அருகே வாளையாறில் பதுங்கியிருந்த மனோஜை போலீஸார் மடக்கி பிடித்தனர். இதனையடுத்து அவர் பலத்த பாதுகாப்புடன் கோத்தகிரி காவல் நிலையம் அழைத்து வரப்பட்டார்.

விடியவிடிய விசாரணை
கோவை புறநகர் எஸ்பி முரளி ரம்பா மனோஜிடம் நடத்திய விசாரணையில் அவருக்கு ஹவாலா கும்பல் மற்றும கூலிப்படைகளுடன் தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. எனவே மனோஜ் இநத் வழக்கில் முக்கிய புள்ளியாக செயல்பட்டிருக்கலாம் எனற் கருதப்படுகிறது.

யார் யாருக்கெல்லாம் தொடர்பு
இவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினால் கோடநாடு எஸ்டேட்டில் கொலை மற்றும் கொள்ளை நடந்தது எப்படி, இதில் யாருக்கெல்லாம் தொடர்பு என்று விடியவிடிய விசாரணை நடத்தியுள்ளனர்.

சிறையில் அடைப்பு
விசாரணை முடிவில் இன்று கோத்தகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மனோஜ் சாமியாருக்கு 12 நான் நீதிமன்ற காவல் அளித்து உத்தரவிட்டப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவையடுத்து அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications