ஜெ. சிகிச்சை வீடியோவில் உள்ள மரம் போயஸ் கார்டனில் உள்ளது.. ஆனந்தராஜ் பரபர பேட்டி
ஜெயலலிதா சிகிச்சை வீடியோவில் சந்தேகம் இருக்கிறது என நடிகர் ஆனந்தராஜ் பேட்டி அளித்து இருக்கிறார்.
Recommended Video

சென்னை: ஆர்.கே நகர் தேர்தலுக்கு முதல் நாள் டிசம்பர் 20ம் தேதி டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த வெற்றிவேல், ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெறும் வீடியோவை வெளியிட்டார். இந்த வீடியோ தமிழகம் முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜெயலலிதா சிகிச்சை வீடியோவில் சந்தேகம் இருக்கிறது என நடிகர் ஆனந்தராஜ் பேட்டி அளித்து இருக்கிறார். மேலும் இந்த வீடியோவிற்கு பின் பெரிய சதி இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் அவர் தனது பேட்டியில் தினகரன் குறித்தும் பேசியுள்ளார். அதேபோல் அதிமுக கட்சியில் நடக்கும் மாற்றங்கள் குறித்தும் பேசியுள்ளார்.

சந்தேகமாக இருக்கிறது
தற்போது இந்த வீடியோ குறித்து நடிகர் ஆனந்தராஜ் பேசி இருக்கிறார். அவர் தனது பேட்டியில் ''வெற்றிவேல் வெளியிட்ட ஜெ. சிகிச்சை வீடியோவில் சந்தேகம் இருக்கிறது. வீடியோவில், எந்த தேதி, என்ன நேரம் என்று குறிப்பிடப்படவில்லை, இது பெரிய சந்தேகத்தை உருவாக்குகிறது'' என்று கூறியுள்ளார்.

சதி
மேலும் ''சிகிச்சை பெறும் வீடியோவின் பின்னணியில் உள்ள மரம் போயஸ் இல்லத்தில் உள்ளது. எனவே அந்த இடம் அப்பல்லோ என்று கூறமுடியாது. வீடியோவை இவ்வளவு நாள் வைத்திருந்தாலே அதில் சதி உள்ளது என்றுதானே அர்த்தம்.'' என்றும் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்.

கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள்
தினகரன் குறித்து பேசிய இவர் ''தினகரன் ஆதரவாளர்கள் பலரும் கட்சியிலிருந்து நீக்கப்படலாம். தவறு செய்தவர்கள் மனம் திருந்தி அதிமுகவுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். அரசியலில் நிலையில்லாமல் பேசும் தினகரன் பின் ஏன் சிலர் செல்கிறார்கள் என்று தெரியவில்லை'' என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.

விசாரணை
ஜெயலலிதா மரண விசாரணை குறித்து பேசிய ஆனந்தராஜ் ''ஜெ மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தின் மீது மக்கள் பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். சசிகலாவிடம் ஆணையம் விளக்கம் கேட்டதற்கும், விசாரணை செய்ததற்கும் பாராட்டுக்கள்'' என்று கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications