சசி குடும்ப நிதி ஒதுக்கீட்டுக்காக மட்டுமே கோப்புகளில் எடப்பாடி கையெழுத்து..நடிகர் ஆனந்தராஜ் விளாசல்
சசி குடும்பம் ஆதாயம் அடையும் வகையில் நிதி ஒதுக்கீட்டுக்காக மட்டுமே தமிழகத்தில் பல்வேறு கோப்புகளில் எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்திட்டுள்ளாரே தவிர மக்கள் நலன் சார்ந்த விஷயங்களுக்காக அல்ல என்று நடிகர் ஆ
சென்னை: சசிகலா குடும்பம் ஆதாயம் அடையும் வகையில் நிதி ஒதுக்கீட்டுக்காக மட்டுமே தமிழகத்தில் பல்வேறு கோப்புகளில் எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்திட்டுள்ளாரே தவிர மக்கள் நலன் சார்ந்த விஷயங்களுக்காக அல்ல என்று நடிகர் ஆனந்தராஜ் தெரிவித்தார்.
தமிழகத்தில் அரசு செயல்படாத அரசாக உள்ளது என்று மாற்று அணியினரும், எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டின. இதற்கு பதிலளிக்கும் வகையில் கடந்த ஒன்றரை மாதங்களில் 1,570 கோப்புகளில் கையெழுத்திட்டதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

இது தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தன்னுடைய இல்லத்தில் செய்தியாளர்களை ஆனந்தராஜ் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ஜெயலலிதா இருந்திருந்தால் இந்த நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற்றிருப்பார்.
குறைந்தபட்சம், அரசு மாணவர்களுக்காவது நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றிருப்பார். ஏதோ 1570 கோப்புகளில் கையெழுத்திட்டதாக எடப்பாடி கூறுகிறார். அதனால் மக்கள் நல பணிகள் ஏதேனும் நடந்ததா, கையெழுத்திட்ட திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கினீர்கள், கோப்புகளை முழுமையாக படித்தீரா. இது குறித்து அவர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
நிதி ஒதுக்கீட்டுக்காகவே கோப்புகளில் கையெழுத்திடப்படுகிறது. இதனால் யார் பயனடைகிறார்களோ அவர்கள் அடைந்து கொண்டுதான் உள்ளார்கள்.
தண்ணீர் இல்லாததால் பெண்கள் இன்று தெருவில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த குடிநீர் பஞ்சத்தை போக்க ஏதேனும் திட்டங்களுக்கு அவர் கையெழுத்திட்டாரா என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். ஜெயலலிதா இருந்த வரை அவர் மீது மகளிர் பெரும் நம்பிக்கை வைத்திருந்தனர்.
அதிகாரம் இல்லாத ஒரு அணி, அதிகாரம் இருக்கும் மற்றொரு அணி ஆகிய இரண்டும் அதிமுக இணைப்பு குறித்து 4 வாரங்கள் இழுத்தடித்து பெரும் நாடகத்தை நடத்திவிட்டனர். எதை மறைப்பதற்காக இந்த நாடகம் என்று ஆனந்தராஜ் கேள்வி எழுப்பினார்.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications