சசிகலாவை அதிமுக பொதுச்செயலராக்க நடிகர் ஆனந்தராஜ் கடும் எதிர்ப்பு!
அதிமுக பொதுச்செயலராக சசிகலாவை நியமிக்க ஆனந்தராஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அடிமட்ட தொண்டர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை: அதிமுக பொதுச்செயலராக்க சசிகலாவை நியமிக்க அக்கட்சியின் நட்சத்திர பேச்சாளரான நடிகர் ஆனந்தராஜ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அவரது தோழி சசிகலாவை அதிமுக பொதுச்செயலராக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் அதிமுக தொண்டர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே அதிமுகவின் நட்சத்திர பேச்சாளரான நடிகர் ஆனந்தராஜ், சசிகலாவை பொதுச்செயலராக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆனந்தராஜ் கூறியதாவது:
அதிமுக தலைமை நியமனம் என்பது அடிமட்டத் தொண்டர்களின் உணர்வுகளை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். எதையுமே காலம் அறிந்து செய்ய வேண்டும்.
எம்.எல்.ஏ.க்கள், எம்பிக்கள் 200 பேர் மட்டுமே கட்சி அல்ல.. அடிமட்ட தொண்டர்களும் இருக்கிறார்கள்... அவர்களில் நானும் ஒருவன். பொதுச்செயலர் நியமனம் போன்றவற்றில் நிதானமாக செயல்பட வேண்டும் என தாழ்மையாக கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஆனந்தராஜ் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications