2016 தேர்தலில் அதிமுக 230 தொகுதிகளில் போட்டி.. ஆனந்த ராஜ் தரும் புதுத் தகவல்!
திருச்சி: 20166ல் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில், கூட்டணி வைக்கும் கட்சிகளுக்கு சில இடங்களை ஒதுக்கி விட்டு 230 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும். போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று முன்னாள் வில்லன் நடிகரும், அதிமுக பேச்சாளருமான ஆனந்தராஜ் கூறியுள்ளார்.
திருச்சியில் நடந்த அதிமுக பொதுக் கூட்டத்தில் சிறப்புப் பேச்சாளராக கலந்து கொண்டு ஆனந்தராஜ் பேசுகையில்,
நாடாளுமன்ற தேர்தலில் அம்மா கூட்டணி போட்டியிட்ட 39 இடங்களில் 37 தொகுதிகளில் வெற்றி பெற்றதும், அம்மா தில்லு முல்லு செய்து வெற்றி பெற்றதாக பலரும் குற்றஞ்சாட்டுகிறார்கள். இதில், ராமதாஸ் ஒருப்படி மேலே போய், ஓட்டு மிஷின்களில் திருட்டு தனம் செய்து நாம் வெற்றி பெற்றுவிட்டதாக சொல்கிறார்.

அப்படி நாங்கள் தில்லு முல்லு செய்து வெற்றி பெற்றிருந்தால், தருமபுரியில் ஏன் நாம் தோற்றுப் போனோம். அவர் சொல்வது உண்மையானால், அவரது மகன் அன்புமணி தோற்றிருப்பார் அல்லவா. அன்புமணி ராமதாஸை தோற்கடிகத்தே தீருவோம் என உழைத்தோம். ஆனால், தருமபுரியில் நாம் வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டோம். இதிலிருந்து ராமதாஸுக்கு புரிந்திருக்க வேண்டும் அ.தி.மு.க. பெற்ற வெற்றி மக்களுக்கு கிடைத்த உண்மையான வெற்றி என்பது.
தி.மு.க. ஆட்சியிலிருந்தபோது, கருணாநிதி, அவரது குடும்பம், அவரது மகள், என குடும்பத்திற்கான ஆட்சி நடந்தது. அதனால்தான் தி.மு.க. அடுத்து நடந்த தேர்தலில் தோற்றுப்போனது. முதல்வர் தலைமையிலான ஆட்சியை தமிழகத்தில் பலதரப்பட்ட மக்களும், நமது சகோதரி, நமது தாய், நம் மகள் தமிழகத்தை ஆள்கிறார் என நினைக்கிறார்கள். அதன்விளைவு தான் இந்த அமோக வெற்றி. அதனால் தான் மக்கள் தொடர்ந்து வெற்றியை கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். இனியும் கொடுப்பார்கள்.
இனி தி.மு.க.விற்கு வெற்றி என்பது எட்டாக்கனிதான். வருகின்ற 2016 சட்டமன்ற தேர்தலில் அம்மா தலைமையிலான கூட்டணி வைக்கின்ற கட்சிகளுக்கு சில இடங்களை ஒதுக்கிவிட்டு 230 தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிடப்போகிறது. போட்டியிடும் அத்தனை இடங்களிலிலும் அம்மா தான் நிச்சயம் வெற்றிபெறுவார் என்றார்.
-
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
தவெகவில் இணைந்த 5 மாஜி அமைச்சர்கள், 7 Ex MLAs! இதுவரை அதிமுகவில் இருந்து விலகியவர்கள் யார் யார்? -
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications