குடிபோதையில் விபத்து- போலீஸிடம் இருந்து நடிகர் அருண்விஜய் தப்பி தலைமறைவு- கார் பறிமுதல்
சென்னை: மதுபோதையில் காரை ஓட்டி விபத்துக்குள்ளாக்கியதால் நடிக அருண்விஜய்யை போலீசார் கைது செய்திருந்தனர். ஆனால் போலீஸ் காவலில் இருந்த அருண்விஜய் தப்பி ஓடி தலைமறைவானார். இதனால் அவரது காரை முதல் கட்டமாக போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னையில் நேற்று முன்தினம் நடிகை ராதிகா மகளின் திருமண வரவேற்பு நடைபெற்றது. இதில் திரை உலக பிரபலங்கள் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் மதுபான வகைகள் ஏகத்துக்கும் பரிமாறப்பட நடிகர், நடிகைகள் தள்ளாடியபடிதான் ஹோட்டலை விட்டு வெளியேறினர். ஆனாலும் போலீசார் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
இப்படி உச்சபோதையில் காரை ஓட்டி வந்த நடிகர் அருண்விஜய், போலீசாரின் வாகனம் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது சிக்கலாகிவிட்டது. இதனால் நடிகர் அருண்விஜய் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
சென்னை நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் போலீஸ் காவலில் இருந்த அருண்விஜய் திடீரென அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் நடிகர் அருண்விஜய்யின் காரை போலீசார் தற்போது முதல் கட்டமாக பறிமுதல் செய்துள்ளனர். அருண்விஜய்யையும் போலீசார் தேடி வருகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications