குடிபோதையில் காரை ஓட்டி விபத்து: சரணடைந்த நடிகர் அருண்விஜய் கைது- ஜாமீனில் விடுதலை!
சென்னை: குடிபோதையில் காரை ஓட்டி போலீஸ் வாகனம் மீது மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடிய நடிகர் அருண்விஜய் இன்று சரணடைந்தார். அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின் சொந்த ஜாமீனில் அருண்விஜய் விடுதலை செய்யப்பட்டார்.
நடிகை ராதிகா மகளின் திருமண வரவேற்பில் கலந்து கொண்டுவிட்டு திரும்பிய நடிகர் அருண் விஜய் உச்சகட்ட போதையில் இருந்துள்ளார். அதே போதையுடன் காரை ஓட்டி போலீஸ் வாகனம் மீது மோதினார் அருண்விஜய்.

இந்த விபத்தில் அருண்விஜய்க்கு காயம் ஏற்படவில்லை எனினும் குடித்துவிட்டு கார் ஓட்டியதால் போலீசார் வழக்குப் பதிவு செய்து பிடித்து வைத்திருந்தனர். ஆனால் அருண்விஜய்யோ, போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார்.
கடந்த சில நாட்களாக அருண்விஜய் தலைமறைவாக இருந்து வருகிறார். இதனால் அவரது காரை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆனாலும் அருண்விஜய் போலீசில் ஆஜராகமல் இருந்து வந்தார்.
இதனிடையே அருண்விஜய் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்த போலீஸ் அதிகாரி ரயில்வே துறைக்கு தூக்கி அடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் அருண்விஜய்யின் காரை திரும்ப ஒப்படைக்க வேண்டுமானால் அவர் போலீஸிடம் நேரில் ஆஜராக வேண்டும் என்று மீண்டும் போலீசார் எச்சரித்தனர். இதனைத் தொடர்ந்து இன்று சென்னை தியாகராயர் நகர் பாண்டிபஜார் போக்குவரத்து காவல்நிலையத்தில் அருண்விஜய் சரணடைந்தார்.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அருண்விஜய்யை சொந்த ஜாமீனில் விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications