வக்கீல் மூக்கை உடைத்து சந்தானம் ஆக்ஷன் ஹீரோவாகிவிட்டார் - நடிகர் ஆர்யா
நடிகர் சந்தானம் ஆக்ஷன் ஹீரோவாக மாறிவிட்டார் என நடிகர் ஆர்யா தெரிவித்தார்.
சென்னை: அடி கொடுத்த சந்தானத்துக்கே கையில் காயம் ஏற்பட்டு விட்டது என்றால் அடி வாங்கியவரின் நிலை என்னவாகியிருக்கும் என்று ஆர்யா கூறியுள்ளார்.
நகைச்சுவை நடிகர் சந்தானம், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இன்னோவேட்டிவ் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்துடன் சேர்ந்து முன்றாம் கட்டளையில் திருமண மண்டபம் கட்டுவதற்காக ரூ. 3 கோடி முன்பணம் கொடுத்ததாக தெரிகிறது.

பணத்தை பெற்று கொண்ட நிறுவனத்தின் மேலாளர் சண்முக சுந்தரம் 3 ஆண்டுகளாக மண்டபத்தை கட்டிக்கொடுக்கவில்லை. சண்முக சுந்தரத்துடன் சந்தானம் வாய்த்தகராறில் ஈடுபட்டார். அந்த சமயம் வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் சண்முக சுந்தரத்துக்கு ஆதரவாக பேசினார்.
அப்போது பிரேம் ஆனந்தை சந்தானம் அடித்துள்ளார். இதனால் அவர் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. நடிகர் சந்தானத்தால் தாக்கப்பட்ட வழக்கறிஞர் பாஜக தென் சென்னை மாவட்டத் துணைத் தலைவராகும். தகவல் அறிந்ததும், பாஜகவினர் வளசரவாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, சந்தானம் மீது நடவடிக்கை எடுக்க கோஷமிட்டனர்.
இதையடுத்து சந்தானம் தலைமறைவானார். இதைத் தொடர்ந்து அவர் முன்ஜாமீன் கோரியுள்ளார். இந்நிலையில் சக்கை போடு போடு ராஜா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட நடிகர் ஆர்யா கூறுகையில், நடிகர் சந்தானம் படத்திலும் மட்டுமல்ல நிஜவாழ்க்கையிலும் ஹீரோதான். அடி கொடுத்த சந்தானத்துக்கே கையில் காயம் ஏற்பட்டு விட்டது என்றால் அடி வாங்கியவரின் நிலை என்னவாகியிருக்கும் என்றார் ஆர்யா.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications