நாலே நாலு நாளைக்கு நான் முதலமைச்சரா இருக்கணுங்க!- கஞ்சா கருப்பு
திருச்செங்கோடு: நாலே நாலு நாலைக்கு என்னை முதலமைச்சரா உட்கார வச்சா எல்லாத்தையும் சரி பண்ணிடுவேன் என்று நடிகர் கஞ்சா கருப்பு கூறியுள்ளார்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட அக்கட்சியின் திருச்சொங்கோடு ஒன்றிய முன்னாள் செயலாளர் முத்துமணி சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக கஞ்சா கருப்பு பிரச்சாரம் செய்து வருகிறார்.

பிரச்சாரத்தின் இடையே செய்தியாளர்களிடம் பேசிய கஞ்சா கருப்பு, "என்னை யாராவது அரசியல் கட்சியில் சேர அழைப்பு விடுத்தால் நாலே நாலு நாட்களுக்கு மட்டும் முதலமைச்சர் பதவியை கேட்டுப் பெறுவேன். அதற்குள் செய்ய வேண்டியதை எல்லாம் செய்துவிடலாம்.
நான் முதலமைச்சர் ஆனால் பள்ளியில் மதிய உணவுக்கு மாணவர் ஒருவருக்கு முழு கோழி ஒன்று வழங்கப்படும். இது நகைச்சுவைக்காக நான் சொல்லவில்லை. சீரியசாத்தான் சொல்றேன்.
சுயேட்சை வேட்பாளர் முத்துமணி வெற்றி பெற்றால் அனைத்து நதிகளும் இணைக்கப்படும்.
பல்வேறு கட்சிகள் எனக்கும் அழைப்பு விடுத்தன. ஆனால் நான் எந்தக் கட்சியிலும் சேரவில்லை. முத்துமணி கட்சி ஆரம்பித்தால் நானும், நடிகை ஷகிலாவும் முதல் நபர்களாக கட்சியில் இணைவோம்.
நான் படிக்காமல் போனதால் என்னை பலரும் ஏமாற்றிவிட்டார்கள். கோடிக்கணக்கில் பணத்தை இழந்துவிட்டேன். எனவே நான் முதலமைச்சரானால் கல்வி முற்றிலும் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பேன்," என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications