ரஜினியை திடீரென சந்தித்த நடிகர் கருணாஸ்... ஏன், எதற்காக??
சென்னை போயஸ் கார்டனில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நடிகர் கருணாஸ் திடீரென சந்தித்து பேசியுள்ளது, தமிழக அரசியலில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: சென்னை போயஸ் கார்டனில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அதிமுக கூட்டணி எம்.எல்.ஏவும் ,நடிகருமான கருணாஸ் திடீரென சந்தித்து பேசியுள்ளது, தமிழக அரசியலில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக கூட்டணியைச் சேர்ந்த எம்எல்ஏவும், நடிகருமான கருணாஸ் அதிமுகவின் சசிகலா அணியில் இருந்து வருகிறார்.

கூவத்தூர் முகாமில் தங்கியிருந்தவர். அதுதொடர்பாக பல சர்ச்சைகளிலும் சிக்கியவர். இதனால் மக்களின் எதிர்ப்பால் தனது திருவாடனை தொகுதியில் கடும் பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்.
சமீபத்தில்தொகுதிக்குப் போனபோது தொகுதி மக்கள் இவரை எதிர்த்துப் போராட்டம் நடத்தினர். செருப்பும் வீசப்பட்டது. இந்நிலையில் ரஜினிகாந்தை நடிகர் கருணாஸ் சந்தித்து பேசியுள்ளது தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
ரஜினிகாந்தை சந்தித்து பேசிய பின் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ் கூறுகையில்,
ரஜினிகாந்தை மரியாதை நிமித்தமாக தான் சந்தித்தேன் . தமிழக அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை.
நவீன தொழில் நுட்பத்தில் 21 ஆண்டுகளுக்கு பிறகு பாட்ஷா திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்துக் கூறினேன். மேலும் ரஜினியை நிறைய பிடிக்கும் என்பதால் சந்தித்தேன்.
ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை தேவையற்றது என்றும் விசாரணை கேட்பது மக்களை ஏமாற்றும் செயல் என்றும் அவர் தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications