மந்திரி சொல்றான், மயிறு சொல்ரான்னு மக்களை அடிப்பீங்களா.. மயில்சாமி ஆவேசம்
சென்னை: ஒரு காட்டுமிராண்டிதான் பெண்களை அடிப்பான். மனிதனாக இருப்பவன் செய்ய மாட்டான். மந்திரி சொல்றான், மயிறு சொல்ரான்னு மக்களை அடிக்காதீங்க. திருப்பூரில் பெண்ணை அடித்த போலீஸ்காரர் அவரது தங்கச்சியாகவோ, அம்மாவாகவோ இருந்தால் அப்படி அடித்திருப்பாரா என்று நடிகர் மயில்சாமி கேட்டுள்ளார்.
திருப்பூரில் மதுக் கடைக்கு எதிராக போராடிய பெண்களை காட்டுமிராண்டித்தனமாக தடியால் அடித்து வெறித்தனத்தைக் காட்டியுள்ளனர் போலீஸார். போலீஸாரின் இந்த கேவலமான செயல் தமிழக மக்களை மிகவும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அதிலும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டிய திருப்பூர் கூடுதல் டிஎஸ்பி பாண்டியராஜன் ஒரு பெண்ணைக் கன்னத்தில் பளார் என அறைகிறார். அவரது செயல் அனைவரையும் பதற வைத்துள்ளது. அத்தனை பேரின்
கோபத்தையும் திருப்பூர் போலீஸார் சில மணி நேரத்தில் வாங்கிக் கட்டியுள்ளனர்.
இந்த கொடும் செயல் குறித்து நடிகர் மயில்சாமி ஆவேசமடைந்துள்ளார். இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
- காட்டுமிராண்டிதான் இப்படி செய்வான்.
- மனிதனாக இருப்பவன் இவ்வாறு செய்ய மாட்டான்.
- மதுக் கடையைத் திறக்கக் கூடாது என்றுதான் மக்கள் போராடினார்கள்
- மக்களை கேட்டுத்தான் கடையை வைக்க வேண்டும்.
- உன் இஷ்டத்திற்கு வைக்க அதிகாரம் கிடையாது
- மக்களுக்குப் பிடிக்காவிட்டால் அது எதுவாக இருந்தாலும் வைக்கக் கூடாது.
- நான் பகிரங்கமாக சொல்கிறேன். நேர்மையான போலீஸுக்கு கோபம் வராது
- பெண்களை, தலையில் முடியே இல்லாத போலீஸ்காரர் கன்னத்தில் அடிக்கிறார்.
- அந்தப் பெண்ணைக் கட்டிய புருஷன் கூட அடித்திருக்க மாட்டார்.
- அப்பெண்ணைத் தாக்க அவருக்கு அதிகாரம் கொடுத்தது யார். வன்மையாக கண்டிக்கிறேன்.
- மக்கள் கொந்தளித்தால் திருப்பி அடித்தால் ராணுவமே வந்தாலம் தாங்க முடியாது. கதை வேறு மாதிரி ஆகி விடும்
- என் தங்கையோ, அம்மாவோ இருந்தால் எப்படி பீல் பண்ணுவேனோ, அந்த உணர்வுதான் எனக்கு உள்ளது.
- போலீஸ் சம்பந்தப்பட்ட பெண்கள் போராடியிருந்தால் இப்படி அடித்திருப்பார்களா
- அவர்களது அம்மா, அக்கா, தங்கச்சி, மனைவியாக இருந்திருந்தால் அடித்திருப்பார்களா
- போலீஸ் மக்களின் நண்பன். அது மாதிரி நடந்து கொள்ளுங்கள். இவர்களால் நல்ல போலீஸாருக்கும் கெட்ட பெயர் வருகிறது.
- மந்திரி சொல்றான், மயிறு சொல்றான்னு கெட்ட பெயர் வாங்கிக்காதீங்க.
- ஏற்கனவே தமிழன்னு வெளியில் சொல்லவே வெட்கக் கேடா இருக்கு.
- மக்களை நிம்மதியா இருக்க விடுங்க, மக்களை தொந்தரவு பண்ணாதீங்க.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications