கமல்ஹாசனுடன் கூட்டணி இல்லை... தனிவழியில் பயணம்... ரஜினி சூசகம்?
நடிகர் கமல்ஹாசனுடன் கூட்டணி இல்லை... தாம் தனித்தே அரசியலில் பயணிக்கப் போகிறேன் என்பதை சிவாஜி கணேசன் மணி மண்டபத் திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் சூசகமாக தெரிவித்தார்.
சென்னை: நடிகர் கமல்ஹாசனுடன் கூட்டணி இல்லை... தாம் தனித்தே அரசியலில் பயணிக்கப் போகிறேன் என்பதை சிவாஜி கணேசன் மணி மண்டபத் திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் சூசகமாக தெரிவித்தார்.
நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று கடந்த மே மாதம் கூறியிருந்தார். மேலும் அரசியலுக்கு வருவதற்கான அனைத்து பணிகளையும் ரஜினிகாந்த் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இதேபோல் நடிகர் கமல்ஹாசனும் தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் நிறைந்துவிட்டது என்று கூறியிருந்தார். அத்துடன் அரசியலுக்கு வந்து தனி கட்சி தொடங்குவது உறுதி எனவும் கூறியிருந்தார்.
|
முன்னால் ஓடிவிடாதே
கமல்ஹாசன் பொதுவாக அரசியல் தொடர்பான கருத்துகளை டுவிட்டரில் தெரிவித்து விடுவார். தம்முடைய ட்விட்டரில் முன்னுக்கு ஓடி விடாதே, கூடி நடந்து செல் என்று கமல் ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார். அது ரஜினியை குறிப்பதாக விமர்சிக்கப்பட்டது.

ரஜினி குறித்து கமல் பேச்சு
அத்துடன் முரசொலி பவளவிழாவில் பங்கேற்று பேசிய கமல்ஹாசன், தற்காப்பை விட தன்மானம் முக்கியம் என கூறியிருந்தார். இது ரஜினியை மனதில் வைத்து கமல்ஹாசன் பேசியதாகவும் கூறப்பட்டது.

ரஜினி பேச்சு
இந்நிலையில் சிவாஜி கணேசனின் மணி மண்டப திறப்பு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ரஜினி காந்த் பேசுகையில் , அரசியலில் வெற்றி பெற பணம், புகழ், பெயர் மட்டும் போதாது. அரசியலில் வெற்றி அடைய என்ன தேவை என்பது மக்களுக்கு மட்டுமே தெரியும். அது எனக்கு சத்தியமாக தெரியாது.

அரசியல் தொடர்பாக ரஜினி பேச்சு
ஒரு வேளை வெற்றியின் ரகசியம் கமலுக்கு தெரிந்திருக்கலாம். அதை கேட்டாலும் அவர் இப்போது சொல்லமாட்டார். ஒரு வேளை ஒரு 2 மாதங்களுக்கு முன்னால் கேட்டிருந்தால் சொல்லியிருப்பாரோ என்னவோ. திரையுலகில் மூத்த அண்ணன் நீங்கள், நான் உங்கள் தம்பி எனக்கு இந்த ரகசியத்தை சொல்லுங்கள் என்றால் நீ கூடவா சொல்கிறேனு சொல்கிறார் என்றார் ரஜினி.

ரஜினியின் சூசக பேச்சு
கமலின் டுவீட்டை மனதில் வைத்தே ரஜினி இப்படி பேசியதாக கூறப்படுகிறது. மேலும் கமலுடன் கூட்டணி சேர ரஜினி தயாராக இல்லை என்பதையும் இது வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications