நேரம் சரியில்லை.. நாளை கட்சி தொடங்கமாட்டார் ரஜினி

Posted By:
Subscribe to Oneindia Tamil
  தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் கட்சி தொடங்காத ரஜினி

  சென்னை: தமிழகம் முழுவதும் தனக்கு கொஞ்சமும் சாதகமில்லாத சூழல் நிலவுவதால் புதிய கட்சி அறிவிப்பை நடிகர் ரஜினிகாந்த் தற்போதைக்கு கைவிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

  தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக கூறி நடிகர்கள் ரஜினியும், கமலும் அரசியலில் குதித்துள்ளனர்.

  தொடர்ந்து டிவிட்டரில் தமிழக அரசையும் அமைச்சர்களையும் விமர்சித்து வந்த கமல் அவ்வப்போது கள ஆய்வுகளை நடத்தி தன்னை அரசியல்வாதி போல் காட்டிக்கொண்டார். அண்மையில் மதுரையில் நடைபெற்ற பிரமாண்ட நிகழ்ச்சியில் கட்சி பெயர், கொடியை அறிவித்தார் கமல்.

  234 தொகுதிகளில் போட்டி

  234 தொகுதிகளில் போட்டி

  நடிகர் ரஜினிகாந்த் நீண்ட ஆண்டுகளாக அரசியல் அறிவிப்பு குறித்து இழுத்தடித்து வந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் தனது அரசியல் அறிவிப்பு அறிவித்தார் நடிகர் ரஜினிகாந்த். வரும் சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்றும் அவர் கூறினார்.

  எந்த அறிவிப்பும் இல்லை

  எந்த அறிவிப்பும் இல்லை

  மேலும் கட்சிப் பெயர், சின்னம், கொடி உள்ளிட்டவற்றை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெறுவதாக கூறிய அவர் விரைவில் கட்சிப் பெயர் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார். ஆனால் இதுவரை ரஜினி தரப்பில் இருந்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

  தமிழ்புத்தாண்டில்

  தமிழ்புத்தாண்டில்

  ரஜினியின் மக்கள் மன்றத்துக்கு கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் தீவிர உறுப்பினர் சேர்க்கை நடந்தபோது ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு தினத்தன்று கட்சியின் பெயரை அறிவிப்பார் என்று தகவல் வெளியானது. இதற்காக மிகப்பெரிய மாநாடு ஒன்றையும் ரஜினி நடத்துவார் என்று கூறப்பட்டது.

  ரசிகர்கள் ஏமாற்றம்

  ரசிகர்கள் ஏமாற்றம்

  இந்நிலையில் தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரிய்ம ஸ்டெர்லைட், நியூட்ரினோ, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிடக்கோரியும் போராட்டங்கள் நடைபெறுகின்றன.

  ரஜினியின் டிவிட்

  ரஜினியின் டிவிட்

  இந்நிலையில் ஐபிஎல் போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை சம்பவம் குறித்து ரஜினி பதிவிட்ட டிவிட் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினியின் அந்த டிவிட் மக்களிடையே எதிர்மாறான விளைவை ஏற்படுத்தியுள்ளது.

  சாதகமற்ற சூழல்

  சாதகமற்ற சூழல்

  தமிழகம் முழுவதும் ரஜினிக்கு எதிரான சூழலே முற்றிலும் நிலவி வருகிறது. தனக்கு கொஞ்சமும் சாதகமற்ற சூழல் நிலவுவதால் ரஜினி தனது அரசியல் கட்சி அறிவிப்பை தற்காலிகமாக கைவிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Actor Rajinikanth political party announcement has been postponed. Sources said Rajini will be lauch his party on Tamil New year.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற