நடிகர் ரஞ்சித் ஓபிஎஸ்க்கு ஆதரவு.. திமுக, மதிமுக,தீபா பேரவையை சேர்ந்த சிலரும் ஓபிஎஸ் அணியில் ஐக்கியம்
சினிமா நடிகர் ரஞ்சித், தி.மு.க., ம.தி.மு.க. நிர்வாகிகள் சிலரும், ஜெ.தீபா அணியில் இருந்த சிலரும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சென்னை: சினிமா நடிகர் ரஞ்சித் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். தி.மு.க., ம.தி.மு.க. நிர்வாகிகள் சிலரும், ஜெ.தீபா அணியில் இருந்த சிலரும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து அவரது அணியில் சேர்ந்துள்ளனர். மேலும் தண்டையார்பேட்டையில் உள்ள பார்வையற்றோர் பள்ளி மாணவ-மாணவிகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் ஓபிஎஸை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அதிமுக ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என இரண்டாக பிரிந்ததைதொடர்ந்து பலரும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து அவரது அணியில் சேர்ந்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரஞ்சித் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

இதேபோல் திமுக, மதிமுக மற்றும் தீபாவின் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை சேர்ந்த நிர்வாகிகள் சிலரும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து தங்களின் ஆதரவை தெரிவித்தனர். முன்னதாக தண்டையார் பேட்டை பார்வையற்றோர் பள்ளி மாணவ, மாணவிகள் 100க்கும் மேற்பட்டோருடன் முன்னாள் டிஜிபி திலகவதி ஓ.பன்னீர்செல்வம் வீட்டிற்கு வந்தார்.
Visually and physically challenged people from RKnagar extended their warm support. pic.twitter.com/m3gErWxwyR
— O Panneerselvam (@OfficeOfOPS) March 21, 2017
அப்போது மாணவ, மாணவிகள் ஓபிஎஸை சந்திக்க ஆசைப்பட்டதால் அழைத்து வந்ததாக திலகவதி கூறினார். இதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகள் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications