நடிகர் விக்ரமின் மகன் கார் ஓட்டி விபத்து.. கைதாகி ஜாமீனில் விடுதலை
நடிகர் துருவ கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் ஆட்டோக்கள் சேதமடைந்தன.
சென்னை: நடிகர் விக்ரமின் மகன் காரை ஓட்டி ஏற்படுத்திய விபத்தில், 3 ஆட்டோக்கள் சேதமடைந்தன. இதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் சிறிது நேரத்தில் ஜாமீனில் விடுவித்தனர்.
நடிகர் விக்ரமன் மகன் துருவ். இவர் தற்போது பாலா இயக்கத்தில் ஒரு படம் நடித்து வருகிறார். ஏற்கனவே தெலுங்கில் ஹிட்டான அர்ஜன் ரெட்டி என்ற படம்தான் தற்போது தமிழில் ரீமேக்கிங் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் துருவ், தனது நண்பர்கள் 3 பேரை காரில் ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தார். தேனாம்பேட்டையில் உள்ள போலீஸ் கமிஷனர் வீடு அருகே சென்ற நிலையில், அவரது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

எதிர்பாராமல் நடந்த இந்த விபத்தில் சாலையோரம் நின்றிருந்த ஆட்டோக்கள் மீது மோதியது. இதில் 3 ஆட்டோக்கள் பலத்த சேதமடைந்தன. அந்த ஆட்டோக்களில் ஒன்றில், படுத்திருந்த டிரைவர் ஒருவரும் படுகாயமடைந்தார்.

அவருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் அப்போதும் அந்த கார் நிற்காமல் சற்று தூரம் சென்று ஒரு பள்ளத்தில் சிக்கி கொண்டது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த பாண்டிபஜார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விபத்தில் காயமடைந்த ஆட்டோ டிரைவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் விபத்து பற்றி விசாரித்த போலீசார் துருவ் மீது அதிகவேகமாக கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்துதல் என்பது உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் சிறிது நேரத்திலேயே அவரை ஜாமீனில் விடுவித்தனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications