ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: விடாது போராடிய விஷால் - வேட்புமனு நிராகரிப்பு
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் நடிகர் விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் நடிகர் விஷாலின் வேட்பு மனுவை தேர்தல் அதிகாரிகள் இறுதியாக நிராகரித்தனர்.
ஆர்.கே.நகரில் டிசம்பர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது.
131 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இம்மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது.

சுயேட்சைகள் மனுக்கள் தள்ளுபடி
திமுக வேட்பாளர் மருதுகணேஷ், அதிமுக வேட்பாளர் மதுசூதனன், தினகரன் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. சுயேட்சைகள் பலரது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

விஷால் மனுவுக்கு எதிர்ப்பு
நடிகர் விஷால் வேட்புமனுவை ஏற்பதில் தொடக்கம் முதலே குழப்பம் நீடித்தது. விஷாலின் வேட்புமனுவை ஏற்கக் கூடாது என அதிமுக, திமுக வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நிறுத்தி வைப்பு
விஷால் மனுவில் சொத்து கணக்கு, உறுதிமொழி சரியாக இல்லை என புகார் கூறினார். இதனையடுத்து விஷாலின் வேட்புமனு பரிசீலனை செய்யப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.

நிரப்பவில்லை என குற்றச்சாட்டு
இதனிடையே தீபாவின் வேட்புமனுவை தேர்தல் அதிகாரிகள் நிராகரித்தனர். அவரது வேட்புமனுவில் பல படிவங்கள் நிரப்பப்படவில்லை என கூறப்பட்டது.

டூப்ளிகேட் கையெழுத்து
மாலை 5.30 மணியளவில் விஷாலின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டது. அவரது வேட்புமனுவில் 2 போலி கையெழுத்துகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் கூறினர்.

விஷால் அதிரடி
நடிகர் விஷால் விடவில்லை தன்னுடைய மனுவை ஏற்க வேண்டும் என்று தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் தண்டையார்பேட்டை ஸ்தம்பித்தது. காவல்துறையினர் வந்து விஷாலை சமாதானப்படுத்தினர். தனக்கு ஆதரவாக கையெழுத்து போட்டவர்களை மிரட்டியதாக புகார் கூறினார் விஷால்.

நிரூபித்த விஷால்
தான் பொய் சொல்லவில்லை என்று கூறிய விஷால், வேட்புமனுவை முன்மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டதற்கான ஆடியோ ஆதாரத்தை வெளியிட்ட விஷால் அதனை தேர்தல் அதிகாரியிடம் அளித்தார்.

விஷால் மனு நிராகரிப்பு
இரண்டாவது முறை பரிசீலனைக்குப் பின்னர் விஷாலின் வேட்பு மனு ஏற்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதனையடுத்து விஷால் தேர்தல் அதிகாரிகளுக்கு நன்றி கூறினார். வெற்றி பெற வேண்டும் எனில் தடைகளை தாண்டவேண்டும் என்றும் கூறினார் விஷால். ஆனால் நள்ளிரவு 11 மணிவரை போராட்டம் நீடித்தது. கடைசியில் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.












Click it and Unblock the Notifications