மதுசூதனன் தரப்பு மிரட்டினர்.. ஆடியோ ஆதாரத்தை வெளியிட்டார் விஷால்!
அதிமுக வேட்பாளர் மதுசூதனன் தரப்பினர் மிரட்டியதாக குற்றம்சாட்டி இருந்த நடிகர் விஷால் அதற்கான ஆடியோ ஆதாரத்தை வெளியிட்டுள்ளார்.
சென்னை : வேட்பு மனுவை முன்மொழிந்தவரை அதிமுக வேட்பாளர் மதுசூதனன் தரப்பினர் மிரட்டியதாக நடிகர் விஷால் கூறி இருந்ததற்கான ஆடியோ ஆதாரம் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் அந்தப் புகாரை மதுசூதனன் தரப்பு மறுத்துள்ளது.
ஆர்கே நகர் தேர்தலில் களமிறங்கிய நடிகர் விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அவரின் வேட்பு மனுவில் முன்மொழிந்து கையெழுத்திட்ட இரண்டு பேர் பின்வாங்கினர். மனுவில் இருப்பது தங்களின் கையெழுத்து அல்ல என்று அவர்கள் கூறியதால் விஷாலின் மனு நிராகரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் தன்னுடைய வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதை கண்டித்து விஷால் தர்ணாவில் ஈடுபட்டார். இதனிடையே முன்மொழிந்தவர்களை அதிமுக வேட்பாளர் மதுசூதனன் தரப்பினர் மிரட்டியதாக நடிகர் விஷால் குற்றம்சாட்டியிருந்தார்.
மதுசூதனன் ஆட்கள் மிரட்டல்
இதனிடையே முன்மொழிந்ததை திரும்பப்பெற்ற பெண்ணின் உறவினரான வேலு என்பவருடன் நடிகர் விஷால் பேசும் தொலைபேசி ஆடியோ வெளியாகியுள்ளது. அதில் விஷால் வேலு என்பவரிடம் முன்மொழிந்ததை திரும்பப் பெற்றிருக்கிறாரா அந்தப் பெண் என விஷால் கேட்க அதற்கு வேலு மதுசூதனனின் ஆட்கள் வீட்டில் இருந்த பெண்களை மிரட்டியதாக கூறுகிறார்.

மிரட்டலுக்கு பயந்து
தேர்தல் அதிகாரி அலுவலகம் எதிரே ஒரு கட்டிடத்தின் அறையில் வைத்து மிரட்டியதோடு, கத்தையாக பணத்தையும் தந்ததாக வேலு கூறுகிறார். அதற்கு அப்படியானால் பணத்திற்கு விலைபோய்விட்டீர்களா என்று விஷால் கேட்க பணம் வாங்கவில்லை, நான் உங்கள் கட்சியில் தான் சேரப்போவதாக சொன்னேன். ஆனாலும் மிரட்டலுக்கு பயந்து பெண்கள் கையெழுத்து போட்டுவிட்டனர்.

உண்மையை சொல்லுங்கள்
அவர்களை நேரில் அழைத்து வந்து இதை சொல்லச் சொல்லி விஷால் கேட்க டிவியில் வந்துவிடுவோம் என்று பயந்து அவர்கள் அழுதுகொண்டிருப்பதாக வேலு கூறுகிறார். நான் மிரட்டவில்லை உண்மைக்காக போராடுகிறேன் அவர்களை வந்து உண்மையை மட்டும் சொல்லச் சொல் என்று விஷால் கூறுகிறார்.

நாங்கள் இல்லை
ஆனால் விஷாலின் இந்த குற்றச்சாட்டை மதுசூதனன் தரப்பினர் மறுத்துள்ளனர். உண்மைக்கு புறம்பாக விஷால் பேசுகிறார் என்றும். விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் வேலு சொல்லும் மதுசூதனன் தரப்பை சேர்ந்த ராஜேஷ் என்பவர் விளக்கம் அளித்துள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications