அப்துல் கலாமும், அரவிந்த் கெஜ்ரிவாலும் தனக்கு உத்வேகம் அளித்தவர்கள் : விஷால் உருக்கம்
சென்னை: அப்துல் கலாமும், அரவிந்த் கெஜ்ரிவால் ஆகிய இருவரும் தான் தனக்கு தேர்தலில் போட்டியிட உத்வேகம் அளித்தவர்கள் என்று நடிகர் விஷால் தெரிவித்து உள்ளார்.
ஆர்.கே நகர் தொகுதியில் வருகிற 21ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தல் தமிழக அரசியல் அரங்கையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

அதற்குக் காரணம் தற்போது களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் தான். விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க ஆகிய கட்சிகளின் ஆதரவு பெற்ற தி.மு.க வேட்பாளர் மருது கணேஷ், ஒன்றிணைந்த ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் தலைமையில் இயங்கி வரும் அ.தி.மு.க வேட்பாளர் மதுசூதனன், தனித்து களம் இறங்கும் டி.டி.வி.தினகரன் என பலம் வாய்ந்த போட்டியாளர்கள் இருக்கும் இடத்தில் நடிகர் விஷாலும் சுயேட்சையாக களம் இறங்குகிறார்.
கடைசி நாளான இன்று விஷால் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். முன்னதாக இன்று காலை காமராஜர் இல்லம், ராமபுரம் எம்.ஜி.ஆர் இல்லம், மெரினாவில் ஜெயலலிதா சமாதி ஆகியவற்றிற்கு மரியாதை செலுத்தினார் விஷால்.
இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், தனக்கு ஆர்.கே நகர் மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் தவிப்பது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளதாகவும், அதனால் அவர்களுக்கு உதவவே தேர்தல் களத்தில் இறங்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், தான் அரசியலில் ஜெயித்து அரசியல்வாதியாக வேண்டும் என்கிற எண்ணத்தில் வரவில்லை என்றும், என்ன நடந்தாலும் களத்தில் மக்களோடு மக்களாக சாதராண மனிதனாகவே இருக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு காரணம் அப்துல் கலாமும், அரவிந்த் கெஜ்ரிவாலும் என்று குறிப்பிட்டு உள்ளார். அவர்கள் இருவரும் தான் தனக்கு உத்வேகத்தை அளித்து இருப்பதாகவும் விஷால் தெரிவித்தார்.
மேலும், தனது இந்த முடிவை திரைத்துறையில் இருக்கும் குஷ்பு, பிரகாஷ் ராஜ், ஆர்யா உள்ளிட்ட பலர் வரவேற்று இருப்பதாகவும், இன்னும் கமல்ஹாசனை சந்திக்கவில்லை என்றும் மனுத்தாக்கல் செய்த பின்பே அவருடன் பேச இருப்பதாகவும் விஷால் குறிப்பிட்டு உள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications