For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நியாயமான கோரிக்கைதானே... மக்கள் நலனுக்காக நிறைவேற்றுங்கள்.. அரசுக்கு விஷால் கோரிக்கை

நியாயமான கோரிக்கைகளுக்காகவே போராடும் போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று விஷால் தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    போராட்டத்தில் ஈடுபடுவர்களுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை - அமைச்சர் விஜய பாஸ்கர்- வீடியோ

    சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஸ்டிரைக்கை கைவிட செய்ய வேண்டும் என்று நடிகர் விஷால் கோரிக்கை விடுத்துள்ளார்.

    ஊதிய உயர்வு கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயக்கப்படவில்லை. குறைவான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் மக்கள் கடும் இன்னலுக்குள்ளாகியுள்ளனர்.

    Actor Vishal says about transport workers strike

    தொழிற்சங்கங்களுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை என்று அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துவிட்டார். பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் போராட்டம் தீவிரமடையும் என்று சிஐடியூவை சேர்ந்த சவுந்தரராஜன் தெரிவித்தார்.

    பொங்கல் பண்டிகை கொண்டாடவுள்ள நிலையில் இதுபோல் போராட்டம் நடத்துவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாவர். இதுகுறித்து நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், அறிவிக்கப்படாத திடீர் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் ஒட்டுமொத்த தமிழ்நாடே ஸ்தம்பித்து போயுள்ளது.

    இன்த வேலை நிறுத்தத்தால் பாமர மக்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். விழாக் காலம் நெருங்கும் நேரத்தில் மக்களின் அவதி இன்னும் அதிகம் ஆகுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

    மக்கள் நலன் மீது அக்கறை கொண்டு தமிழக அரசு உடனே பேச்சுவார்த்தை நடத்தி போக்குவரத்து ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று வேலை நிறுத்தத்தை கைவிட செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

    English summary
    Actor Vishal says that transport workers are in strike impact on people. The TN Government should talk with them. They are protesting for their reasonable request.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X